Posted by : Author
Thursday, 4 May 2017
பல் முளைத்தல், பல் விழுதல், பல் சொத்தை, ஈறு வீக்கம் மற்றும் தேய்வு இது போன்ற பல காரணங்களினால் பல்வலி ஏற்படுகிறது.
அத்தகைய பல்வலியை உடனடியாக குணமாக்க இயற்கையில் உள்ள ஒரு அற்புதமான தீர்வு இதோ!
தேவையான பொருட்கள்
- கிராம்பு
- தேங்காய் எண்ணெய்
- உப்பு
- மிளகு
- தண்ணீர்
முதலில் மிளகு மற்றும் கிராம்பு ஆகிய இரண்டையும் நன்றாக அரைத்து தூள் செய்துக் கொள்ள வேண்டும்.
பின் ஒரு கிண்ணத்தில் கிராம்பு தூள், தேங்காய் எண்ணெய், மிளகுத்தூள், உப்பு ஆகியவற்றை ஒன்றாக கலந்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போல செய்து கொள்ள வேண்டும்.
பயன்படுத்தும் முறை
ஒரு டூத்ப்ரஷ் பயன்படுத்தி, அந்த பேஸ்ட்டை வலி உண்டாகும் பாதிக்கப்பட்ட இருக்கும் இடத்தில் தொடர்ச்சியாக தடவி சிறிது நேரம் கழித்து நீக்க வேண்டும்.
இதனால் பற்களில் ஏற்படும் வலி குறைவதுடன், பற்கள் மற்றும் ஈறுகளின் ஆரோக்கியம் மேம்படும்.
Related Posts :
- Back to Home »
- ஆரோக்கியத்தை சொல்லும் »
- பல்வலிக்கு உடனடி நிவாரணம்....

