Posted by : Author
Saturday, 29 April 2017
விஷேச தினங்களில் மட்டும் அழகு சாதனப் பொருள்கள் உபயோகிக்கும் பழக்கம் போய் அன்றாடம் அலுவலகங்களுக்கும் கல்லூரிகளுக்கும் செல்லும் போது சாதாரணமாக பயன்படுத்தும் நிலை வந்துவிட்டது.
இந்த அழகு சாதன பொருள்கள் அழகினை கொடுத்தாலும் அவை ஏற்படுத்தும் பின்விளைவுகள் அதிகம். இவை அனைத்தும் மெதுமெதுவாக கொல்லும் விஷமாகும்.
கண்களில் ஐலைனர்(Eyeliner) போடாத பெண்கள் மிக குறைவு. தொடர்ந்து ஐலைனர் பயன்படுத்தும் பெண்களுக்கு பார்வை குறைபாடு ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம் என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
பொதுவாக ஐலைனரை இமை முடிகளின் மீது தான் பயன்படுத்துவர். இலேசாக ஐலைனரை உபயோகிக்கும் போது ஏற்படும் பிரச்சனைகளை காட்டிலும் அடர்த்தியாக உபயோகிக்கும் போது அதிக பிரச்சனைகள் உண்டாகிறது.
பொதுவாக ஐலைனர் தயாரிப்பில் மெழுகு, சிலிக்கான் மற்றும் கண்களில் ஒட்டி கொள்வதற்காக பசை போன்ற பொருள்கள் பயன்படுத்தப்படுகிறது.
இமைகளில் போடுவதால் ஐலைனரின் துகள்கள் 15 முதல் 30 சதவீதம் கண்களுக்குள்ளாக சென்றுவிடுகிறது. இது பார்வை குறைப்பாட்டினை உண்டாக்கிவிடுகிறது.
ஒவ்வொரு முறையும் ஐலைனர் போடும் முன்னராக ஐலைனரை கூர்மையாக்கி உபயோகிக்க வேண்டும், இதனால் தொற்றுகள் ஏற்படும் அபாயம் குறைகிறது.
எனினும் இத்தகைய அழகு சாதனப் பொருள்களை தேவையின்றி பயன்படுத்துவதை குறைப்பதால் உடலில் ஏற்படும் பிரச்சனைகளை தவிர்க்கலாம்.
Related Posts :
- Back to Home »
- அழகுக்கு குறிப்புகள் »
- Eyeliner போடுபவர்களின் கவனத்திற்கு: அழகில் இருக்கும் ஆபத்து...

