Posted by : Author Thursday, 27 October 2016


அன்றாட வாழ்வில் நாம் பலவகையான உணவுகளை சாப்பிட்டு வருகின்றோம்.

இதனால் நம்முடைய பற்களில் மஞ்சள் போன்ற கரைகள் ஏற்படுகிறது.

நாம் சிரிப்பதை மிகவும் அழகாக காட்டுவது பளிச்சிடும் நமது வெண்மையான பற்கள் தான்.

எனவே பற்களில் ஏற்படும் மஞ்சள் கரையால், நமது வெண்மையான பற்களின் அழகை கெடுக்கிறது.

பற்களில் ஏற்படும் மஞ்சள் கரையை போக்கி, எப்போதும் பளிச்சிடும் வெண்மையான பற்களைப் பெறுவதற்கு இதோ சூப்பரான டிப்ஸ்.

சமையல் சோடா

ஒரு டீஸ்பூன் சமையல் சோடா எடுத்துக் கொண்டு அதனுடன் தேவையான அளவு எலுமிச்சை பழத்தின் சாற்றை கலந்து கொள்ள வேண்டும்.

பின் அதை காட்டன் பஞ்சைக் கொண்டு பற்களின் கரைகளில் தடவி இரண்டு நிமிடங்கள் கழித்து, பற்களை நன்றாக தேய்த்துக் கழுவ வேண்டும்.

இதனால் உங்களின் பற்கள் கரைகள் நீக்கப்பட்டு வெண்மையாக பளிச்சிடும்.

எலுமிச்சை பழம்

குறிப்பிட்ட அளவு எலுமிச்சை பழத்தின் சாறு எடுத்துக் கொண்டு அதனுடன் சிறிதளவு உப்பு கலந்துக் கொள்ள வேண்டும்.

பின் அந்த பேஸ்ட்டை பற்களில் நன்றாக தேய்த்து சுத்தமான தண்ணீரில் கழுவ வேண்டும்.

ஆரஞ்சு பழம்

ஆரஞ்சு பழத்தில் விட்டமின் C மற்றும் கால்சியம் சத்துக்கள் இருப்பதால், இந்த பழத்தின் தோலை காயவைத்து பொடி செய்து கொள்ள வேண்டும்.

பின் இந்த ஆரஞ்சுப் பழத்தோலின் பொடியைக் கொண்டு காலை மற்றும் இரவு படுப்பதற்கு முன் பற்களை நன்றாக துலக்க வேண்டும்.

இவ்வாறு தினமும் செய்து வந்தால், பளிச்சிடும் பற்களை நீங்கள் பெறலாம்.

துளசி இலை

துளசி இலைகள் சிறிதளவு, ஆரஞ்சு தோலின் தூள் ஆகியவற்றை ஒரு கப்பில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

பின் இதில் தேவையான அளவு தண்ணீரை ஊற்றி நன்றாக கலந்து, அதை மஞ்சள் கரை படிந்துள்ள பற்களில் தேய்த்து வந்தால், பற்களில் உள்ள மஞ்சள் கரைகள் விரைவில் நீங்கி பற்கள் வெண்மையாக இருக்கும்.


Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

Welcome to My Blog

- Copyright © மருத்துவம் -New Mannar- Powered by New Mannar - Designed by New Mannar -