Posted by : Author
Saturday, 29 April 2017
கோடைக்காலத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருப்பதால் அம்மை நோய்கள் பரவும் அபாயம் அதிகமாக உள்ளது.
கோடைக் காலத்தில் மட்டும் அம்மை பரவுவது ஏன்?
கோடை வெப்பத்தால் பூமி சூடாகும் போது, சுற்றுச்சூழலில் உள்ள அசுத்தமான இடங்களில் இருக்கும் குப்பை கூளங்களில் உள்ள பல்வேறு கிருமிகள் உயிர்த்தெழுந்து, காற்று மூலம் மனிதர்களுக்கு பரவுகின்றது.
அவ்வாறு பரவும் வைரஸ்கலில் வேரிசெல்லா ஜாஸ்டர் (Varicella Zoster) எனும் வைரஸ் கிருமி. மூலம் சின்னம்மை நோய் ஏற்படுகிறது.
அம்மை நோயின் அறிகுறிகள் என்ன?
அம்மை நோயின் தாக்கம் ஏற்பட்டால் அது முதலில் சாதாரண காய்ச்சல் போல ஏற்படும்.
அதன் பின் இரண்டாம் நாளில் உடல்வலி, தலைவலி, சோர்வு அதிகமாகும். காய்ச்சல் கடுமையாகும். உடலில் அரிப்பு, நமைச்சல், எரிச்சல் ஏற்படும்.
வாய் மற்றும் நாக்கில் சிறு சிறு கொப்புளங்கள் ஏற்படும். மார்பு மற்றும் முதுகில் சிவப்பு நிறத் தடிப்புகள் தோன்றிய பின் அது நீர் கோத்த கொப்புளங்களாக மாறிவிடும்.
அம்மை நோய் எப்படி பரவுகிறது?
சிக்கன் பாக்ஸ் என்று கூறப்படும் அம்மை வகை நோய்கள் பாதிக்கப்பட்ட நபரிடம் இருந்து மற்றவர்களுக்கு நேரடியாகவோ அல்லது இருமல், தும்மல் மற்றும் கொப்புளங்களில் இருந்து வரும் நீரின் மூலமாகவோ பரவுகிறது.
அம்மை நோயின் பாதிப்புகள் என்ன?
சின்னம்மை நோய் குழந்தைகளைத் தீவிரமாகத் தாக்கினால், நிமோனியா, மூளைக்காய்ச்சல், எலும்பு சீழ்மூட்டழற்சி, இதயத்தசை அழற்சி, சிறுநீரக அழற்சி போன்ற கடுமையான பாதிப்புகள் ஏற்படலாம்.
கர்ப்பிணிகளுக்குச் சின்னம்மை பரவினால், கருவில் வளரும் சிசுவைப் பாதித்துப் பிறவி ஊனத்தை உண்டாக்கலாம்.
அம்மை நோயை தடுப்பது எப்படி?
- அன்றாடம் நாம் சாப்பிடும் உணவு பழக்க வழக்கங்களை மாற்றிக் கொள்வதன் மூலம் அம்மை நோயினை தடுக்கலாம்.
- கோடைக்காலத்தில் ஒரு நாளைக்கு இரண்டு முறைகள் குளிப்பதுடன், வாரத்தில் இரண்டு நாட்கள் தலைக்கு நல்லண்ணெய் வைத்து குளிப்பது மிகவும் அவசியமாகும்.
- குளிக்கும் போது அதிக குளிர்ந்த நீரிலோ அல்லது சூடான நீரிலோ குளிக்காமல் மிதமான நீரில் குளிக்க வேண்டும்.
- உடலிற்கு குளிர்ச்சியை தரக்கூடிய தர்பூசணி, நுங்கு, இளநீர் போன்றவற்றையும் பழங்களையும் அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
Related Posts :
- Back to Home »
- ஆரோக்கியத்தை »
- அம்மை நோய் பரவும் அபாயம்: இதை செய்தால் தடுக்கலாம்...

