Posted by : Author
Friday, 7 April 2017
வாயில் சொத்தைப் பற்கள் இருந்தால், அது கடுமையான வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்தும். ஆனால் சொத்தைப் பற்களை போக்க இயற்கையில் பல வழிகள் உள்ளது. அதில் ஒன்று தான் முட்டை ஓடு.
முட்டை ஓட்டில் மக்னீசியம், இரும்புச்சத்து, பொட்டாசியம், அலுமினியம், பாஸ்பரஸ், சல்பர், சிலிகான், சோடியம் போன்ற கனிமச்சத்துக்கள் நிறைந்துள்ளது. எனவே அது சொத்தைப் பற்களை எளிதில் போக்க உதவுகிறது.
இது குறித்து மருத்துவர்கள் நடத்திய ஆய்வில், முட்டை ஓட்டில் எளிதில் உடல் உறிஞ்சும்படியான கால்சியம் ஏராளமான அளவில் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர்.
தயாரிக்கும் முறை
ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி, நன்கு கொதிக்க வைத்து, அதில் முட்டை ஓடுகளைப் போட்டு 5 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி, பின் முட்டை ஓடுகளை உலர்த்தி, அதை நன்கு மென்மையாக பொடி செய்து கொள்ள வேண்டும்.
பயன்படுத்தும் முறை
தினமும் இந்த முட்டை ஓடு பொடியை 1/2 டீஸ்பூன் உண்ணும் உணவில் அன்றாடம் சேர்த்து வர வேண்டும்.
நன்மைகள்
முட்டை ஓட்டின் பொடியை உணவில் சேர்த்து வந்தால், பற்களின் ஆரோக்கியம் மேம்படுவதுடன், எலும்பு மற்றும் மூட்டு சம்பந்தமான கோளாறுகளில் இருந்து விடுபட்டு, கால்சியம் குறைபாட்டை தடுக்கலாம்.
Related Posts :
- Back to Home »
- ஆரோக்கியத்தை சொல்லும் »
- சொத்தைப் பற்களை எளிமையாக போக்கலாம்.. முட்டை ஓடு போதுமே!

