Posted by : Author Friday, 7 April 2017


மனிதர்களின் உடலுறுப்புகளில் சிறுநீரகம் மிக முக்கிய உறுப்பாகும். தற்போது மாறி வரும் உணவு பழக்க முறையால் எல்லா வயதினருக்குமே சிறுநீரக நோய்கள் வருகிறது.

சில முக்கிய முக்கிய அறிகுறிகளை வைத்து சிறுநீரகம் பாதிக்கப்பட்டிருக்கிறதா என தெரிந்து கொள்ளலாம்

உடல் சோர்வு மற்றும் குறைவான ஆற்றல்

சிறுநீரகம் ஒருவருக்கு பாதிப்படைந்தால் உடல் எப்போதும் சோர்வாகவும், பலவீனமாகவும் இருக்கும். உடனே மருத்துவரை அணுக வேண்டும்.

சிறுநீர் கழிதல்

சிறுநீர் அளவுகதிமாக கழிந்தால் அதுவும் இரவு நேரத்தில் அதிகளவு வெளியேறினால் சிறுநீர் பாதித்திருப்பதாக அர்த்தம்

தூக்கமின்மை

சிறுநீரக பிரச்சனை இருப்பவர்களுக்கு உடலில் உள்ள நச்சுக்கள் சிறுநீர் மூலம் வெளியேறாது. இதனால் இரவில் சரியான தூக்கம் வராது.

உடல் அரிப்பு

சிறுநீரகங்கள இரத்தத்தில் கனிமங்கள் மற்றும் சத்துக்களை சமநிலையில் வைக்க முடியாத போது உடல் அரிப்பு கடுமையாக இருக்கும். தொடர் அரிப்பு இருந்தால் கூட சிறுநீரக கோளாறின் அறிகுறி தான்

அடிக்கடி ஜலதோஷம்

ஒருவர் நல்ல சூடான சூழல் உள்ள இடத்தில் இருந்தால் கூட அவருக்கு அடிக்கடி ஜலதோஷம் ஏற்பட்டால் சிறுநீரகத்தில் ஏதோ கிருமி பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அர்த்தமாகும்.

சிறுநிரீல் ரத்தம்

சிறுநீருடன் இரத்தம் கலந்து வந்தால் சிறுநீரகத்தில் கோளாறு உள்ளதாக அர்த்தம். உடனே மருத்துவர்களை பார்பது நலம்

முதுகு வலி

முதுகின் கீழ் பகுதியில் கடுமையான வலி இருந்தால் சிறுநீரகத்தில் கல் அல்லது வேறு பிரச்சனை இருக்க அதிக வாய்ப்புள்ளது.








Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

Welcome to My Blog

- Copyright © மருத்துவம் -New Mannar- Powered by New Mannar - Designed by New Mannar -