Posted by : Author Friday, 7 April 2017


அழகு சாதனப்பொருள்களில் மிக முக்கியமானது லிப்ஸ்டிக். இதனை உபயோகிப்பதால் வசீகர தோற்றம் கிடைக்கும். ஆனால் இது ஏற்படுத்தும் விளைவுகளோ மிக ஆபத்தானது.

தற்போது தயாரிக்கப்படும் லிப்ஸ்டிக்குகளில் அதிகளவு காரீயமானது பயன்படுத்தப்படுகிறது.

இதனால் புற்றுநோய் கூட ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என கலிபோர்னியா பல்கலைகழகத்தில் மேற்கொண்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

குறைந்த அளவில் காரீயம் உள்ள பொருள்கள் உடல்நலத்திற்கு தீங்கினை விளைவிக்காது என்றாலும் அதை தொடர்ந்து பயன்படுத்துவது தவறு என்கின்றனர் ஆய்வாளர்கள்.

லிப்ஸ்டிக் தயாரிக்கப்பயன்படும் மூலப்பொருள்களிலும், நிறத்திற்காக அதனுடன் சேர்க்கப்படும் பொருள்களிலும் அதிகளவு காரீயம் கலந்துள்ளது.



லிப்ஸ்டிக்கினை பயன்படுத்தும் போது அதிலுள்ள காரீயம் தோலினால் உறிஞ்சப்பட்டு இரத்தத்தில் கலக்கிறது. காரீயமானது உடல் உள்ள ஈஸ்ட்ரோன் எனும் ஹார்மோன் சுரப்பினை அதிகரிக்கிறது.

இந்த ஹார்மோன் பெண்களுக்கு அழகு, வசீகர தோற்றம் போன்றவற்றினை அளிக்கிறது. ஆனால் அளவுக்கு அதிகமாக சுரக்கும் போது இயல்பாக மார்புகள் பெரிதாவது போன்று தோன்றி இறுதியில் அது புற்றுநோயாக மாற வாய்ப்புகள் அதிகம்.

மேலும், லிப்ஸ்டிக் உபயோகிக்கும் போது உதட்டின் நிறம் கருப்பாக மாறினாலோ அல்லது தோல் உறிந்தாலோ அந்த லிப்ஸ்டிக்-ஐ பயன்படுத்தவே கூடாது.

மொடலிங் துறையிலும் சினிமா துறையிலும் உள்ளவர்கள் லிப்ஸ்டிக் பயன்படுத்துவதை தவிர்க்க முடியாத ஒன்று.

இவர்கள் காரீயம் பயன்படுத்தாத ஆர்கானிக் லிப்ஸ்டிக்கை உபயோகிக்கலாம். சிறுவயதிலேயே லிப்ஸ்டிக் உபயோகிப்பதை கட்டாயமாக தவிர்க்க வேண்டும்.

லிப்ஸ்டிக் உபயோகத்தினை தவிர்ப்பதன் மூலம் சிறுநீரகம், கல்லீரல், நீரிழிவு, புற்றுநோய் போன்ற உடல்நல கோளாறுகள் உண்டாவதை தடுக்கலாம்.

காரீயம் கலந்துள்ள லிப்ஸ்டிக்கினை கண்டறிவதற்கு அதனை சிறிது கையில் மேற்புரத்தில் தடவி லிப்ஸ்டிக்கின் மீது செயின், மோதிரம் போன்ற தங்க உலோகத்தினை தேய்க்கும் போது கருப்பு நிறமாக மாறினால் அதில் காரீயம் உள்ளது.

அதே போன்று அதிக நேரம் அழியாமல் இருக்கும் லிப்ஸ்டிக்களிலும் அதிக காரீயம் உள்ளது. அதை உபயோகிப்பதை தவிர்ப்பது நலம்.

Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

Welcome to My Blog

- Copyright © மருத்துவம் -New Mannar- Powered by New Mannar - Designed by New Mannar -