Posted by : Author
Friday, 7 April 2017
உடல் ரீதியாக ஏற்படும் ஒருசில பிரச்சனைகளை இயற்கை வழியில் குணமாக்க அற்புதமான வழிகள் இதோ!
- மஞ்சளை சுட்டு பொடி செய்து, அதை தேங்காய் எண்ணெயில் குழப்பி காலை மற்றும் இரவில் ஆறாத புண்களின் மீது போட்டால் சீக்கிரம் குணமாகிவிடும்.
- நெருப்பு அல்லது சுடுநீர் பட்ட இடத்தில் பெருங்காயத்தை அரைத்துப் பூசினால், அது புண்ணின் எரிச்சலைக் குறைத்து, கொப்பளம் ஏற்படுவதை தடுக்கிறது.
- கறிவேப்பிலை மற்றும் சீரகத்தையும் ஒன்றாக சேர்த்து மை போல அரைத்து வாயில் போட்டு தண்ணீர் குடித்தால், வயிற்றுப்போக்கு உடனே நிற்கும்.
- வெண்டைக்காயை உணவில் அடிக்கடி சேர்த்து வந்தால், நரம்புகள் வலிமை அடைவதுடன், மூளையின் இயக்கத்தை சீராக்கி, ஞாபக சக்தியை அதிகரிக்கச் செய்கிறது.
- தேங்காய் எண்ணெயில் 5 வெற்றிலைகளைப் போட்டு நன்றாகக் காய்ச்சி, அந்த எண்ணெயை புண்கள் மீது தடவினால், விரைவில் குணமாகும்.
- தினமும் ஒரு கைப்பிடி அளவு கொத்த மல்லிக்கீரையை பச்சையாக மென்று சாப்பிட்டு வந்தால், கண் பார்வையின் ஆரோக்கியம் அதிகரிக்கும்.
- சீரகத்தை நல்லெண்ணையில் காய்ச்சி தலையில் தேய்த்து குளித்து வந்தால், தலைவலி, பித்த மயக்கம் குணமாகும்.
- வாழைப்பூவை இடித்து சாறு பிழிந்து, அதை மோரில் கலந்து குடித்து வந்தால், வயிற்றுவலி உடனே குணமாகும்.
- வெள்ளை வெங்காயத்தை நெய்யில் வதக்கி, பனங்கற்கண்டு சேர்த்து காலை மற்றும் மாலையில் ஒரு தேக்கரண்டி சாப்பிட்டு வந்தால், வயிற்றின் சுற்றளவு குறையும்.
- சுக்கை நீர் விட்டு அரைத்து, பின் அதை கொதிக்கவைத்து மூட்டுகளில் தடவி வந்தால், மூட்டுவலி உடனே குறையும்.
Related Posts :
- Back to Home »
- ஆரோக்கியத்தை »
- ஆறாத புண்களா? வயிற்றுவலியா? உடனடியாக இதை செய்திடுங்கள்!

