Posted by : Author
Saturday, 29 April 2017
அசைவ உணவினை சாப்பிடுவோரில் பெரும்பாலானோர் அதன் சதைப்பகுதியினையே விரும்பி சாப்பிடுவர்.
ஆனால் சதைப்பகுதிகளை காட்டிலும் மூளை, ஈரல் போன்ற உறுப்புகளில் தான் அதிகளவு சத்துக்கள் உள்ளது. இருப்பினும் சில சமயங்களில் ஒரு சிலருக்கு இது அஜீரண கோளாறு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்திவிடும்.
ஆடு, மாடு, போன்றவற்றின் எந்தெந்த உறுப்பில் எந்தெந்த சத்தானது உள்ளது என்பதையும் அவை என்ன நன்மைகள் தருகின்றது என்பதையும் காணலாம்.
கல்லீரல்
இதில் அதிகளவு விட்டமின்கள் நிறைந்துள்ளது. அதிக சத்துக்களை கொண்ட கல்லீரல் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றப் பயன்படுகின்றது.
சிறுநீரகம்
மனிதனை போன்றே விலங்களுக்கும் இரண்டு சிறுநீரங்கள் உள்ளது. இவை நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது.
மூளை
மிக நுட்பமான சிக்கல்கள் நிறைந்த உறுப்பு எனினும் அதிகளவு ஓமேகா 3 மற்றும் அமினோ அமிலங்கள் நிறைந்துள்ளது.
சத்துக்கள்
சதைகளை காட்டிலும் உறுப்புகளில் அதிகளவு இரும்புச்சத்தானது உள்ளது. சைவ உணவுகளை காட்டிலும் இதில் அதிக இரும்புசத்து இருக்கிறது.
இறைச்சியின் சதைப்பகுதியினை சாப்பிடுவதை விட இந்த உறுப்புகளை சாப்பிடுவதால் வயிறு வேகமாக நிரம்பிவிடுவதுடன் எளிதில் பசிப்பதில்லை.
இந்த உறுப்புகளில் அதிகளவு கொலைனானது உள்ளதால் மூளை வளர்ச்சிக்கு உதவுவதுடன் அதற்கு தேவையான ஆற்றலையும் தருகிறது.
விலை குறைவாக உள்ள இந்த உறுப்பு பகுதி, தசையினை வலிமைப்படுத்தும் தன்மை கொண்டது.
யார் சாப்பிடக்கூடாது?
இது அதிகளவு யூரிக் அமிலத்தை உற்பத்தி செய்வதால் ஆர்த்ரைடிஸ் இருப்பவர்களுக்கு அதிக வலியினை உண்டாக்கும். எனவே ஆர்த்ரைடிஸ், கர்ப்பிணிகள் குறைவாகவே சாப்பிடவேண்டும்.
Related Posts :
- Back to Home »
- ஆரோக்கியத்தை »
- இறைச்சியில் உள்ள மூளை, ஈரலை சாப்பிடாமல் தவிர்க்க வேண்டியவர்கள்...

