Posted by : Author
Saturday, 22 April 2017
புற்றுநோய் என்பது உடனடியாக திடீரென வரும் நோயல்ல. பல நாட்களாக நமது உடலில் இருந்து புற்றுநோய் செல்கள் பெருகிய பின்னரே நமக்கு தெரிய வருகிறது.
ஆனால் புற்றுநோய் செல்கள் வளர ஆரம்பித்த உடனே நமது உடலில் சில அறிகுறிகள் தோன்றுகிறது.
அந்த அறிகுறிகளை தொடக்கத்திலேயே கவனிக்காத பட்சத்தில் புற்றுநோயானது தீவிரமடைகிறது.
கட்டிகள்
சருமத்திற்கு அடியில் கட்டிகள் இருப்பதை போன்று உணர்ந்தால் அலட்சியமாக இருக்காமல் கட்டாயம் மருத்துவரை அணுக வேண்டும்.
சாதாரண கட்டிகள் புற்றுநோய்க்கான கட்டிகளாக மாறுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
சருமத்தில் அலர்ஜி
தோலில் சொறி போன்றவை ஏற்படுவது புற்றுநோய்க்கான அறிகுறியாகும். நம் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு செல்கள் புற்றுநோய் செல்களுக்கு எதிராக செயல்படும் போது இது போன்று ஏற்படும்.
நாள்பட்ட காயம்
நமது உடலில் ஏற்படும் காயமானது விரைவாக சரியாகவில்லை எனில் புற்றுநோய் செல்கள் வளர்ந்து கொண்டு இருப்பதாக அர்த்தம்.
வாயில் புடைப்புகள்-வாயின் உள்பகுதி அல்லது நாக்கில் திடீரென ஏற்படும் புடைப்புகள் கூட புற்றுநோய்க்கான ஒரு அறிகுறியே. இத்தகைய அறிகுறிகள் ஏற்பட்டால் உடனே கட்டாயம் மருத்துவரிடம் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
உணவினை விழுங்குவதில் சிரமம்
உணவினை விழுங்குவதில் சிரமம் ஏற்பட்டாலோ அல்லது பசியின்மை இருந்தாலோ அது புற்றுநோய்க்கான முக்கிய அறிகுறியாகும்.
இதனால் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தின் சக்தியானது முற்றிலும் குறைந்து புற்றுநோயின் தாக்கமானது அதிகரிக்கும்.
குடல் இயக்கம்
சீரான குடல் இயக்கம் இல்லாததும் புற்றுநோய்க்கான அறிகுறியே. மலத்துடன் இரத்தம் கலந்து வெளியேறினால் அது இரத்த புற்றுநோய்க்கான அறிகுறியாகும்.
சிறுநீர்
சிறுநீரின் நிறம் மற்றும் வாசனையில் ஏதேனும் மாற்றம் இருந்தாலோ அல்லது இரத்தம் கலந்து வெளியேறினாலோ அது புற்றுநோய்க்கான முக்கிய அறிகுறியாகும்.
இரத்த கசிவு
பற்களின் ஈறுகள் பாதிப்படைந்து வீங்கி இரத்தம் கசிவது, மார்பு காம்புகள் போன்றவற்றில் இரத்தம் கசிவது புற்றுநோய்க்கான மற்றுமொரு அறிகுறியாகும்.
குரல் மாற்றம்
உங்களின் குரலில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். ஏனெனில் குரல் மாற்றம் கூட புற்றுநோய்க்கான அறிகுறியாகும்.
நாள்பட்ட இருமல்
தொண்டை புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய் இருப்பவர்களுக்கு தொடர்ந்து நாள்பட்ட இருமலானது இருக்கும். இருமலின் போது அதிக வலி இருக்கும்.
Related Posts :
- Back to Home »
- ஆரோக்கிய வாழ்வு »
- இந்த அறிகுறிகள் இருந்தால் அலட்சியப்படுத்தாதீங்க: புற்றுநோயாக கூட இருக்கலாம்...

