Posted by : Author Monday, 17 April 2017


இரவில் நாம் தூங்கிக் கொண்டிருக்கும் போது, நச்சுப்பூச்சி போன்ற விஷம் கொண்ட பூச்சிகள் அல்லது ஏதேனும் பாம்புகள் கடித்து விட்டால், அதை எப்படி கண்டறிவது உங்களுக்கு தெரியுமா?

பாம்பு கடித்தத்தை கண்டுபிடிப்பது எப்படி?

பாம்பு கடித்தவர்களுக்கு ஆடு தின்னாப்பாளை என்ற செடியின் வேரைக் கொடுத்துச் சுவைக்கச் சொல்ல வேண்டும் அது,

இனிப்புச் சுவையாக இருந்தால் கடித்தது நல்ல பாம்பு.
புளிப்புச் சுவையாக இருந்தால், கடித்தது கட்டு விரியன் பாம்பு.
வாய் வழவழப்பாக இருந்தால், கடித்தது நஞ்சு குறைந்த வழலைப்பாம்பு, நீர் பிரட்டை.
கசப்புச் சுவையாக இருந்தால், கடித்தது பாம்பு வகைகள் அல்லாத வேறு பூச்சிகள்.
பாம்பு கடித்து விட்டால் என்ன செய்ய வேண்டும்?

  • பாம்பு கடித்து விட்டால், வாழைப்பட்டையை உரித்து, அதில் பாதிக்கப்பட்டவரை படுக்க வைத்து, வாழைப்பட்டைச் சாற்றை 1 லிட்டர் பிழிந்து வாயில் ஊற்றி, அதை குடிக்க வைக்க வேண்டும்.

தேள் கடித்தால் என்ன செய்ய வேண்டும்?

  • எலுமிச்சைப் பழ விதைகளையும், உப்பையும் கலந்து அரைத்துக் குடித்தால், தேள் கடித்த நஞ்சு இறங்கி விடும்.
  • தேள் கடித்த இடத்தில் எலுமிச்சைப் பழத்தின் ரசத்தையும் உப்பையும் கலந்து தடவினால், நல்ல பலன் கிடைக்கும்.
  • தேள் கடித்து விட்டால், உடனே ஒரு கல்லில் சில சொட்டுத் தண்ணீரை தெளித்து அதில் புளியங்கொட்டையை தேய்த்து, அதன் சூட்டுடன் வைத்தால், அந்த இடத்தில் உள்ள நஞ்சு இறங்கியதும் புளியங்கொட்டை கீழே விழுந்து விடும்.
  • சிறிது நாட்டு வெல்லத் தூளுடன் கொஞ்சம் சுண்ணாம்பு மற்றும் சிறிதளவு புகையிலையை சேர்த்து கலந்து நன்றாகப் பிசைந்து தேள் கடித்த இடத்தில் வைத்துக் கட்டினால் நஞ்சு இறங்கி விடும்.
  • குப்பை மேனி இலையைப் பறித்து நன்றாக நீரில் கழுவி விட்டுப் பின்பு கசக்கிச் சாறு எடுத்துத் தேள் கடித்த இடத்தில் தடவ வேண்டும். அத்துடன் கசக்கிய இலையைக் கடிவாயில் வைத்துக் கட்டி விட்டால் நஞ்சு இறங்கும்.

  • வெறி நாய்க்கடிக்கு என்ன செய்ய வேண்டும்?

வெறி நாய் கடித்து விட்டால், நாயுருவியின் வேர் மற்றும் எலுமிச்சைப் பழத்தின் விதையை ஒன்றாக சேர்த்து, அதில் எலுமிச்சைச் சாறு விட்டு அரைத்து, அதை காலை மற்றும் மாலை ஆகிய இரு வேளைகளும் பத்து நாட்கள் தொடர்ந்து சாப்பிட வேண்டும்.

Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

Welcome to My Blog

- Copyright © மருத்துவம் -New Mannar- Powered by New Mannar - Designed by New Mannar -