Posted by : Author
Saturday, 22 April 2017
சிறுநீரக பாதிப்பு மற்றும் செயலிழப்பின் அறிகுறிகள் இருந்தால், அப்போது கடைபிடிக்க வேண்டிய முறைகள் மற்றும் அதனை தடுக்கும் வழிமுறைகளை தெரிந்துக் கொள்ளுங்கள்.
சிறுநீரக பாதிப்பு யாருக்கு ஏற்படும்?
நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம், உப்பு நீர் வியாதி, சிறுநீர் அழற்சி, சிறுநீரகக் கற்கள், சிறுநீர் அடைப்பு மற்றும் வலி நிவாரண மாத்திரைகளை அதிகமாக எடுத்துக் கொள்பவர்கள் ஆகியோர்களுக்கு சிறுநீரகம் நிரந்தரமாக செயலிழக்க அதிக வாய்ப்புள்ளது.
சிறுநீரக பாதிப்பு உண்டாக்க முக்கிய காரணங்கள் என்ன?
வயிற்றுப் போக்கு மற்றும் வாந்தியால் உடலில் நீர் வற்றிப் போவதாலும், பாம்புக்கடி, விஷப் பூச்சிக் கடி, எலி காய்ச்சல் மற்றும் வலி நிவாரணிகளால் ஏற்படும் ஒவ்வாமை போன்ற காரணத்தினால், சிறுநீரகம் செயலிழப்பு ஏற்படும்.
சிறுநீரக பாதிப்பின் அறிகுறிகள் என்ன?
சிறுநீரக பாதிப்பினால் கை மற்றும் கால்களில் வீக்கம் ஏற்படுகிறது என்பதை கண்டு அறிந்துவிட்டால் அளவுக்கு அதிகமாக தண்ணீர் அருந்துவது, உப்பு சேர்த்துக் கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.
சிறுநீரக செயலிழப்பை தடுக்க என்ன செய்ய வேண்டும்?
- சிறுநீரக செயலிழப்பை தடுக்க அசைவ உணவுகளைத் தவிர்த்து விட்டு, சைவத்திற்கு முழுவதுமாக மாற வேண்டும்.
- அன்றாடம் உடலிற்கு போதுமான அளவு நீர் அருந்த வேண்டும், சிறுநீரை அடக்கிக் கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.
- வலி நிவாரண மாத்திரைகள், காலாவதியான மருந்துகள், மருத்துவர் பிறருக்கு பரிந்துரைத்த மருந்துகள் ஆகியவற்றை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.
- அதிக உடற்பருமன் ஏற்படாமல் தடுப்பதுடன், புகை மற்றும் மதுப் பொருட்கள் உபயோகிப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
உணவுகளில் எதை சாப்பிடக் கூடாது?
- உணவுகளில் எதையும் அளவாக எடுத்துக் கொள்ள வேண்டும். கொழுப்புச் சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடக் கூடாது.
- சிறுநீரகச் செயலிழப்பு உள்ளவர்கள் வாழைப்பழம், காஃபி, டீ, செயற்கை பானங்கள், பேரீச்சம் பழம், இளநீர், ஆரஞ்சு, இவற்றில் பொட்டாசியம் அதிகமாக இருக்கிறது என்பதால் இந்த உணவுகளை சுத்தமாக தவிர்க்க வேண்டும்.
Related Posts :
- Back to Home »
- ஆரோக்கியத்தை »
- சிறுநீரக செயலிழப்பை தடுக்க என்ன செய்ய வேண்டும்?

