Posted by : Author Friday, 10 March 2017


இருமல் மற்றும் சளி தொல்லையால் ஏராளமானோர் கடுமையாக அவஸ்தைப்படுகிறார்கள் அல்லவா?

அந்த வகையில் எந்தவித பக்க விளைவுகளும் ஏற்படாமல் இருமல் சளிப் பிரச்சனையில் இருந்து உடனடியாக விடுபட அற்புதமான பாட்டி வைத்தியங்கள் இதோ!

  • ஆரஞ்சு ஜூஸில் தேன் மற்றும் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து கலந்து குடித்தால், சளி, இருமல், தொண்டை வலி போன்ற பிரச்சனையில் இருந்து விரைவில் விடுபடலாம்.
  • கொய்யாப் பழத்தை மிளகுத் தூளில் தொட்டு சாப்பிட்டால், நுரையீரலில் உள்ள சளி வெளியேறி, இருமல் பிரச்சனையில் இருந்து நல்ல தீர்வு கிடைக்கும்.
  • மாட்டுப் பாலை நன்கு கொதிக்க வைத்து, அதில் தேன் கலந்து குடித்து வந்தால், சளி, இருமல் தொல்லையில் இருந்து உடனடியாக விடுபடலாம்.
  • சிறிய வெங்காயத்தை தீயில் சுட்டு சாப்பிட்டால், தொடர்ச்சியான இருமல் மற்றும் சளித் தொல்லையில் இருந்து விடுபட நல்ல நிவாரணம் கிடைக்கும்.
  • வெற்றிலையின் சாறு எடுத்து, அதை தேனில் கலந்து குடித்து வந்தால், இருமல் பிரச்சனையில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.
  • இரவில் தூங்குவதற்கு முன் பாலில் மிளகுத் தூள் மற்றும் மஞ்சள் கலந்து குடித்தால், இருமல் பிரச்சனை வருவதை முன்கூட்டியே தடுக்கலாம்.
  • கற்பூரவள்ளி இலையை நீரில் போட்டு நன்றாக கொதிக்க வைத்து, பின் அந்த நீரை வடிகட்டி குடித்து வந்தால், சளித் தொல்லை விரைவில் குணமாகும்.

Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

Welcome to My Blog

- Copyright © மருத்துவம் -New Mannar- Powered by New Mannar - Designed by New Mannar -