Posted by : Author
Friday, 10 March 2017
பருவமடைந்த பெண்கள் அனைவருக்கும் மாதவிடாய் என்பது பொதுவான விஷயமாக இருந்தாலும் கூட அந்த நேரத்தில் சுத்தம் இன்றியமையாத ஒன்று.
இரத்தப்போக்கு ஏற்படுவதால் தொற்றுகளும், நோய் கிருமிகளும் எளிதில் பரவும் அபாயம் உள்ளது.
இந்நாட்களில் பயன்படுத்தும் நாப்கின்களை குறைந்தபட்சமாக 4 மணி நேரத்திற்கு ஒரு முறை மாற்றவேண்டும்.
தற்போது உள்ள நாப்கின்களில் அதிகளவு கெமிக்கல் உபயோகிக்கப்படுவதால் நோய் தொற்று, கர்ப்பபை புற்றுநோய் போன்றவை ஏற்படுகிறது.
இதனைத் தடுப்பதற்காக இயற்கை முறையில் நாப்கின்களை தயாரிப்பது தொடர்பாக அவினாசிலிங்க மகளிர் பல்கலைக் கழகத்தின் ஜவுளி மற்றும் ஆடை துறை ஆராய்ச்சி ஒன்றினை மேற்கொண்டது.
நாப்கின்களின் மேற்பரப்பில் பயன்படுத்தப்படும் பாலிபுரொப்பலீன் எனும் கெமிக்கலானது நோய் தொற்றினை ஏற்படுத்துவதால் அதன் பாதிப்பை குறைப்பதற்காக கற்றாலைஜெல், பன்னீர், சாமந்தி போன்றவற்றைப் பயன்படுத்தினர்.
இதனைப் பயன்படுத்தி நாப்கின்களை சில பெண்கள் உபயோகித்து அதில் உள்ள குறைகளை சரிசெய்தனர்.
இதே போன்ற இயற்கை முறையினை பயன்படுத்தி திருச்சி மாவட்டம், முசிறியை சேர்ந்த வள்ளிகணேசன் தயாரித்துள்ளார்.
இயற்கை முறையில் நாப்கின்களை தயாரிப்பை சுயதொழிலாக செய்யும் இவர் நாப்கின் பஞ்சுகளின் மீது வேப்பிலை, கற்றாலை, துளசி போன்ற மூலிகைகளை பவுடராக மாற்றி தூவி பாக்கெட்டாக மாற்றுகிறார்.
இந்த இயற்கையான முறையில் தயாரிக்கும் நாப்கின்களை பயன்படுத்திய பெண்களின் கர்ப்பப்பை தொடர்பான பிரச்சனைகள் குறைந்துள்ளதாக கூறியுள்ளார்.
Related Posts :
- Back to Home »
- ஆரோக்கியத்தை »
- கர்ப்பப்பை புற்றுநோயை தடுக்கும் ஹெர்பல் நாப்கின்: சுயதொழிலில் திருச்சி பெண் சாதனை....

