Posted by : Author
Friday, 10 March 2017
நாம் ஒவ்வொரு வயதினை அடையும் போதும் நம்முடைய உடல் மற்றும் மனம் ரீதியாக பல்வேறு மாற்றங்கள் மட்டுமல்ல உடல் பிரச்சனைகளையும் சந்திக்க நேரிடும்.
அந்த வகையில் உடல் ரீதியாக ஹார்மோன்களில் மாற்றம் அடைவதால், பல உடல் ரீதியாக பிரச்சனைகள் ஏற்படும் என்பதால் ஒருசில மருத்துவ சோதனைகளை செய்துக் கொள்வது மிகவும் அவசியம்.
பெண்கள் செய்ய வேண்டிய மருத்துவ சோதனை என்ன?
- இரத்த அழுத்த பரிசோதனையை பெண்கள் கண்டிப்பாக மேற்கொள்ள வேண்டும். ஏனெனில் உயர் இரத்த அழுத்தம் இருந்தால் இருதய பிரச்சனைகள் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது.
- விட்டமின் D சத்து குறைவாக இருந்தால் பெண்களின் எலும்பு பலவீனமாக இருக்கும். இதனால் ஆஸ்டியோபோரோசிஸ் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. எனவே பெண்கள் எலும்பு அடர்த்தி பரிசோதனை செய்துக் கொள்வது மிகவும் அவசியம்.
- பெண்களில் பலர் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்றாக தைராய்டு பிரச்சனை உள்ளது. இதனால் கை கால்களில் வலி, மூட்டுகளில் வலி மற்றும் வீக்கம் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். எனவே பெண்கள் அனைவரும் தைராய்டு பரிசோதனை செய்ய வேண்டும்.
- நீரிழிவு நோய் குறிப்பாக குண்டாக இருக்கும் பெண்கள் மற்றும் கர்ப்பமாக உள்ள பெண்களை அதிகமாக பாதிக்கிறது. எனவே 30 வயதை அடைந்த பெண்கள் கட்டாயமாக நீரிழிவிற்கான பரிசோதனையை மேற்கோள்வது மிகவும் அவசியம்.
- பெண்களுக்கு ஏற்படும் மார்பகப் புற்றுநோயைத் தடுக்க மேமொகிராம் எனும் பரிசோதனை உதவுகிறது. எனவே 30 வயதுடைய பெண்கள் இதற்கான சோதனையை செய்து கொள்ள வேண்டும்.
- பெண்கள் தங்களின் 30 வயதிற்கு மேல் கட்டாயமாக பேப் ஸ்மியர் சோதனை செய்து கொள்ள வேண்டும். ஏன்னெல் இந்த பரிசோதனை செய்துக் கொள்வதால் கர்ப்பப்பை வாய் புற்று நோய் ஏற்படாமல் தடுக்கலாம்

Related Posts :
- Back to Home »
- ஆரோக்கியத்தை »
- இது பெண்களுக்கு மட்டும்: கட்டாயம் தெரிந்துக் கொள்ளுங்கள்.. ஆபத்து!

