Posted by : Author Friday, 10 March 2017


கனடா நாட்டில் மேற்கொண்ட மருத்துவ ஆய்வு ஒன்றில் நோயாளி ஒருவர் உயிரிழந்த பிறகும் அவரது மூளை 10 நிமிடங்கள் வரை செயல்பாட்டில் இருந்ததாக மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

கனடாவில் உள்ள Western Ontario பல்கலைக்கழகத்தை சேர்ந்த மருத்துவர்கள் தான் இந்த அரிய கண்டுபிடிப்பை வெளியிட்டுள்ளனர்.

இவர்களுடைய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 4 நோயாளிகளின் மூளை செயல்பாட்டினை மருத்துவர்கள் கூர்மையாக கவனித்து வந்துள்ளனர்.

நோயாளிகள் நால்வரும் குணப்படுத்த முடியாத நோயால் அனுமதிக்கப்பட்டதால் சில தினங்களுக்கு முன்னர் நால்வரும் உயிரிழந்துள்ளனர். இதனை மருத்துவர்கள் ஆதாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

நால்வரின் இதயமும் முழுமையாக தனது செயல்பாட்டின்னை நிறுத்திக்கொண்டது.

மரணத்திற்கு பிறகு மூவரின் மூளையும் செயல்படாமல் நின்றுள்ளது. ஆனால், ஒரு நோயாளியின் மூளை மட்டும் மரணத்திற்கு பிறகும் சுமார் 10 நிமிடங்கள் வரை இயங்கியுள்ளது.

அதாவது, மனிதர்கள் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும்போது ஒரு விதமான அலைகளை மூளை வெளியிடும்.

இந்த அலைகள் தான் நாம் உயிருடன் இருப்பதை நிரூபிக்கும். ஆனால், மரணமடைந்த அந்த நோயாளியின் மூளையும் இதே அலைகளை வெளியிட்டுள்ளது மருத்துவர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

மேலும், உயிரிழக்கும் 5-ல் ஒரு நபரது மூளை மரணத்திற்கு பிறகும் செயல்பட வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் சந்தேகம் அடைந்துள்ளனர்.

இந்த மருத்துவ ஆய்வை மேலும் விரிவாக செய்து அதன் முடிவுகளை விரைவில் வெளியிட உள்ளதாக கனடா மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

Welcome to My Blog

- Copyright © மருத்துவம் -New Mannar- Powered by New Mannar - Designed by New Mannar -