Posted by : Author Friday, 10 March 2017


செவ்வாய் ஆராய்ச்சி பயணத்தால் விஞ்ஞானிகளுக்கு ரத்தப்புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம் என புதிய ஆய்வறிக்கை ஒன்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

பூமியில் இருந்து செவ்வாய் கோள் சென்றடைய 3 ஆண்டுகள் மற்றும் 140 மில்லியன் மைல்கள் பயணம் மேற்கொள்ள வேண்டும்.

குறித்த இந்த பயணத்தால் கதிர்வீச்சு தாக்கும் அபாயம் மிக மிக அதிகம் என புதிய ஆய்வறிக்கை ஒன்று எச்சரித்துள்ளது.

இதனால் ஆய்வினை முடித்துக்கொண்டு பூமிக்கு திரும்பும் விஞ்ஞானிகள் ரத்தப்புற்றுநோயுடன் திரும்ப நேரிடும் என அந்த ஆய்வறிக்கை சுட்டிக்காட்டுகின்றது.

குறித்த ஆய்வறிக்கையை நாசா விஞ்ஞானிகளும் தற்போது ஒப்புக்கொண்டுள்ளனர்.


செவ்வாய் கோளை நெருங்க நெருங்க கதிர்வீச்சு அபாயம் அதிகரிப்பதாக கூறும் ஆய்வாளர்கள், இது நேரிடையாக மனித திசுக்களை தாக்கி புற்றுநோய்க்கு வழிவகுக்கும் என ஆய்வில் தெரிய வந்துள்ளது.

மட்டுமின்றி மிக அதிக அளவிலான எலக்ட்ரான்களின் தாக்குதல் நமது திசுக்களில் மரபணு ரீதியான கடும் சேதத்தை வரவழைக்கிறது. இதுவும் புற்றுநோய்க்கான வாய்ப்பை பெருமளவு அதிகரிக்க செய்கிறது.

விண்வெளி பயணகாலத்தில் பயணிகளுக்கு மிக அதிக அளவில் சூரிய ஆற்றல் கதிர்களின் தாக்குதல் இருக்கும் எனவும், மட்டுமின்றி காஸ்மிக் கதிர்களின் தாக்கமும் இருக்கும் என ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

குறித்த ஆய்வில் செவ்வாய் பயணத்தின்போது ஏற்படும் கதிர்வீச்சுகளை செயற்கையாக உருவாக்கி, பின்னர் ஆய்வுக்கு உட்படுத்திய நபர்களின் திசுக்களை எலிகளில் செலுத்தி ஆய்வுக்கு உட்படுத்தியதில், அவைகளில் புற்றுநோய் வாய்ப்புகள் மிக அதிகம் காணப்பட்டதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். மட்டுமின்றி வெள்ளை ரத்த அணுக்களின் உற்பத்தி சுமார் 80 விழுக்காடு சரிவடைந்ததும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.




Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

Welcome to My Blog

- Copyright © மருத்துவம் -New Mannar- Powered by New Mannar - Designed by New Mannar -