Posted by : Author Thursday, 29 September 2016


செலரிக் கீரை என்பது கொத்தமல்லிக் தழையை போலத் தோற்றமளிக்கும் ஒரு கீரை வகையைச் சார்ந்தது.

ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் சீனா போன்ற கிழக்கு ஆசியா போன்ற நாடுகளில் காணப்படும் இந்த செலரிக் கீரையானது, தற்போது இந்தியாவின் பல இடங்களில் பரவலாகக் காணப்பட்டு வருகின்றது.

செலரிக் கீரையில், விட்டமின் B, C, காம்ப்ளக்ஸ், பொட்டாசியம், இரும்புச் சத்து, ஃபோலிக் அமிலம், சோடியம் மற்றும் அமினோ அமிலங்கள் போன்ற உடலுக்கு ஆரோக்கியமான சத்துக்கள் நிறைந்துக் காணப்படுவதால், இந்த கீரையை சமைத்து சாப்பிடுவதை விட பச்சையாக சாப்பிட்டால் நல்ல ஆரோக்கியம் கிடைக்கின்றது.

கொலஸ்ட்ரால்

செலரிக் கீரையில் பியூட்டைல் தாலைட் என்ற சத்துக்கள் உள்ளதால், நம் உடம்பில் உள்ள கெட்ட கொழுப்புகளை வெளியேற்றி, கொலஸ்ட்ராலின் அளவை குறைக்கிறது.

உடல் எடை

செலரிக் கீரையை ஜூஸ் செய்து குடிப்பதன் மூலம் நம் உடம்பில் பைல் அமிலத்தின் சுரப்பைத் தூண்டி கெட்டக் கொழுப்புகளை கரைக்கிறது.

மேலும் அதிகமான இனிப்புகளை சாப்பிடத் தூண்டும் மூளையின் உணர்வுகளை கட்டுப்படுத்தி, உடல் பருமனைக் குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

உயர் ரத்த அழுத்தம்

செலரிக் கீரையில் தாலைட் ஸ்ட்ரெஸ் இருப்பதால், இவை நம் உடம்பில் உள்ள ஹார்மோன்களை கட்டுப்படுத்தி, தேவையற்ற படபடப்புகள் மற்றும் டென்ஷன்களை குறைக்கிறது.

எனவே இதை தொடர்ந்து 7 நாட்கள் செலரிக் கீரையை சமைத்து சாப்பிட்டால், ரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்துகிறது.


தூக்கமின்மை

இன்சோம்னியா என்று கூறப்படும் தூக்கமின்மை நோயினால் நீண்ட நாட்களாக தூங்காமல் அவதிப்படுபவர்கள், செலரிக் கீரையை சாப்பிடுவதால், நம் உடலில் உள்ள நரம்புகளில் உண்டாகும் இறுக்கத்தை குறைத்து, மெலடோனின் ஹார்மோனை அதிகப்படுத்தி நல்ல உறக்கத்தை கொடுக்கிறது.

சிறுநீரக கற்கள்

செலரிக் கீரையை தினமும் சாப்பிட்டு வந்தால், சிறுநீரகம் மற்றும் பித்தப்பைகளில் உருவாகும் கற்களைக் கரைத்து வெளியேற்றுகிறது.

ஜீரண சக்தி

செலரிக் கீரையில் அதிக நார்சத்து இருப்பதால், நம் உடம்பில் உள்ள உணவுக் குழாய், சிறு குடலின் ஆரோக்கியத்தை அதிகப்படுத்தி, மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் வராமல் தடிக்கிறது.
 




Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

Welcome to My Blog

- Copyright © மருத்துவம் -New Mannar- Powered by New Mannar - Designed by New Mannar -