Posted by : Author
Thursday, 29 September 2016
மழைக்காலம் வந்தாலே அனைவருக்கும் வரும் பிரச்சனைகளில் ஒன்று ஜலதோஷம்.
சளி பிடித்து விட்டால் நாம் எந்தவொரு செயலிலும் கவனம் செலுத்த முடியாமல் மிகவும் நம்மை வாட்டி வதைக்கும்.
சளி தொல்லையை குணப்படுத்த நம் வீட்டில் உள்ள அன்றாட பொருட்களை சுலபமாக பயன்படுத்தி விரைவில் போக்கி விடலாம்.
சுக்கு தேநீர்
தண்ணீரை நன்றாக கொதிக்க வைத்து அதில் 2 டிஸ்பூன் சுக்கு தூள், 1/4 டிஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 1 டிஸ்பூன் தேன் ஆகியவற்றை ஒன்றாக கலந்து குடித்து வந்தால், சளித் தொலையில் இருந்து உடனே விடபடலாம்.
இஞ்சி சாறு
இஞ்சி சாறு மற்றும் தேன் ஆகியவற்றை சம அளவு கலந்து, அதை தினமும் காலையில் 3 வேளைகள் குடித்து வந்தால் நெஞ்சு சளியை உடனே தீர்க்கும்.
எலுமிச்சை மற்றும் தேன்
சூடான தண்ணீரில் 1 டிஸ்பூன் தேன் மற்றும் 2 டிஸ்பூன் எலுமிச்சை சாறு ஆகியவற்றைக் கலந்து, தினமும் 3 வேளைகள் மறக்காமல் குடிக்க வெண்டும். இதனால் சளித்தொல்லை விரைவில் நீங்கும்.
ஏலக்காய் பொடி
1 டிஸ்பூன் ஏலக்காய் பொடியுடன், சிறிதளவு நெய் கலந்து சாப்பிடால், மார்புச் சளி உடனே காணாமல் போய்விடும்.
சீரகம்
சீரகத்தை நன்கு பொடி செய்து எடுத்துக் கொள்ள வேண்டும் . பின் அதனுடன் பனங்கற்கண்டை சேர்த்து தினமும் 2 வேளைகள் சாப்பிட்டு வந்தால், இருமல் மற்றும் சளி பிரச்சனைகளை விரைவில் குணமடையும்.
வல்லாரை
வல்லாரை கீரையுடன், சிறிதளவு தேன் கலந்து சாப்பிட்டு வந்தால், வரட்டு இருமல் மற்றும் சளி தொல்லை வராமல் தடுக்கும்.
துளசி
துளசி இலைகளை 1 லிட்டர் நீரில் போட்டு ஊற வைக்க வேண்டும். பின் அந்த நீரை குடிப்பதுடன் அந்த துளசி இலைகளையும் சாப்பிட்டு வந்தால், சளித் தொல்லை முற்றிலும் குணமாகிவிடும்.
தேங்காய் எண்ணைய்
நெஞ்சுச்சளி தொல்லையில் இருந்து விரைவில் விடுபட தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து கலந்து நன்கு சூடாக்கி கொள்ள வேண்டும். பின் அதை மிதமான சூட்டில் நெஞ்சில் தடவி வர வேண்டும்.
வெங்காய சாறு
சிறிய வெங்காயம் சாற்றுடன், தேன் மற்றும் இஞ்சி சாற்றை ஒன்றாக சேர்த்து கலந்து, தினமும் காலையில் சாப்பிட வேண்டும். இதனால் இரண்டே நாட்களில் உங்களுக்கு சளி தொல்லை நீங்கிவிடும்.
மிளகு
அதிக இருமல் மற்றும் சளி இருந்தால், உடனே மிளகை தூளாக்கி அதனுடன் தேன் கலந்து தினமும் மூன்று வேளை சாப்பிட்டு வந்தால் உடனே குணமாகிவிடும்.

Related Posts :
- Back to Home »
- ஆரோக்கியத்தை »
- சளி தொல்லையில் இருந்து விடுபட இதோ சூப்பரான டிப்ஸ்!

