Posted by : Author
Thursday, 29 September 2016
அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு என்பது பழமொழி . நாம் நல்லது என்று அதிகம் விரும்பி உண்ணும் பல உணவு பொருட்களில் கெடுதலும் இருக்கவே செய்கிறது. அப்படியான சிலவற்றை காண்போம்.
மஷ்ரூம்
பலர் விரும்பி உண்ணும் மஷ்ரூமில் ஐந்து சதவீதம் வரை நச்சு தன்மை உள்ளது. இந்த நச்சு தன்மை வெளிப்பட்டால் வாந்தி, மயக்கம், சரும அரிப்பு போன்ற பிரச்சனைகள் வர வாய்ப்புகள் இருக்கிறது.
ஆப்பிள்
அப்பிளின் விதைகளில் சயனைட் தன்மை உள்ளது. இதை அதிகம் சாப்பிட்டால் வாந்தி ஏற்படும்.
தக்காளி
பூச்சிகளுக்கு விஷமாக தரப்படும் டொமாடின் என்னும் விஷத்தன்மை உள்ள பொருள் தக்காளியில் உள்ள காம்பு மற்றும் பச்சை இலையில் உள்ளது.
பீன்ஸ்
மனித உடலுக்கு கேடு விளைவிக்கும் லெக்டீன் என்னும் நச்சு பொருள்பீ ன்ஸில் அதிக அளவில் உள்ளது. சரியாக வேக வைக்காத பீன்ஸ் அதிகம் உண்ணும் போது வாந்தி, பேதி ஏற்பட வாய்ப்பிகள் அதிகம்.
செர்ரி பழங்கள்
சயனைட் என்னும் விஷம் செர்ரி படத்தின் விதைகளில் உள்ளது. இதை சாப்பிட்டால் வாந்தி, சிறுநீரக கோளாறு பிரச்சனை போன்றவைகள் ஏற்படலாம்.
பிரேசிலியன் நட்ஸ்
எல்லா காய்கறிகளிலும் கதிர்வீச்சு தன்மை இருக்கும். ஆனால் பிரேசிலில் இருந்து வரும் இந்த பிரேசிலியன் நட்ஸில் இந்த கதிர்வீச்சு தன்மை அதிக அளவில் உள்ளதால் இது உடல் நலத்தை பாதிக்கும் வாய்ப்புகள் அதிகம்.
Related Posts :
- Back to Home »
- ஆரோக்கிய வாழ்வு »
- இந்த உணவுகளில் எல்லாம் விஷமுள்ளது: உஷார் ரிப்போர்ட்.....

