Posted by : Author
Thursday, 29 September 2016
நிம்மதியாக தூங்கினாலே பாதி நோய் தீர்ந்து விடும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
ஆனால் தற்போது உள்ள நவீனகாலத்தில் மனிதர்களிடையே நிம்மதியான தூக்கம் என்பதே கிடையாது. இதை நாம் நம்முடைய உறவினர்கள் மற்றும் நண்பர்களிடையே பார்த்திருப்போம்.
தூக்கம் மட்டும் சீர்குலைந்து போனால் மன அழுத்தம், ஒரு வித கோபம் என பல பிரச்சனைகள் ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது.
சரியாக தூக்கமில்லாதவர்கள் மருத்துவர்களை அனுகி மாத்திரைகள் மூலம் தீர்வு காண நினைப்பார்கள். அது முற்றிலும் தவறு, மாத்திரைகள் தற்கால தீர்வு ஏற்படுத்துமே தவிர, நிரந்த தீர்வு ஏற்படுத்தாது.
தூக்கம் எளிதாக வருவதற்கு மூச்சு பயிற்சியை மேற்கொண்டால் ஒரு நிமிடத்தில் நிம்மதியாக தூங்கிவிடலாம். மூச்சு பயிற்சி செய்வதன் மூலம் உடல் நலத்தை பேணி காக்க முடியும். நல்ல உறக்கமும் பெற முடியும்.
நான்கு நொடிகள் மூச்சை உள் இழுத்து, ஏழு நொடிகள் மூச்சை ஹோல்ட் செய்து, எட்டு நொடிகளில் மூச்சை விட வேண்டும். இதை சுழற்சி முறையில் சில நிமிடங்கள் செய்தாலே ஆழ்ந்த உறக்கம் பெற உதவும்.
இந்த 4-7-8 ட்ரிக் உடலுக்கு நிறைய ஆக்சிஜன் கிடைக்க செய்கிறது. இதனால் மூளை அதிக ஆக்சிஜன் பெற்று சுறுசுறுப்பாக செயற்படும். மூளையில் மந்த நிலை இருந்தாலே நல்ல உறக்கம் பெற முடியும்.
4-7-8 மூச்சு பயிற்சி இயற்கையான முறையில் நரம்பு மண்டலத்தில் அழுத்தம் குறைத்து இலகுவாக உணர வைக்கிறது. நரம்பு மண்டலம் அமைதி நிலை அடைவதால் நீங்கள் எளிதாக ஆழ்ந்த உறக்கம் பெற முடியும்.
இது மூளை மற்றும் இதய துடிப்பை சீராக்கி, உறக்கம் கெடாமல் இருக்கவும் உதவுகிறது. மேலும் நுரையீரல் செயற்திறன் அதிக படுத்தவும், இரத்த ஓட்டத்தை சீராக்கவும் செய்கிறது.
Related Posts :
- Back to Home »
- ஆரோக்கிய வாழ்வு »
- ஒரு நிமிடத்தில் ஆழ்ந்த உறக்கம் வேண்டுமா?

