Posted by : Author
Friday, 1 July 2016
சருமம் இளமையுடன் நீண்ட நாட்கள் இருப்பதற்கு போதிய அளவில் தண்ணீர் குடித்து வர வேண்டும்.
தண்ணீர் குடிப்பதுடன் நீர்ச்சத்து நிறைந்த உணவுப் பொருட்களையும் உட்கொண்டு வந்தால் உடலில் நீர்ச்சத்தை அதிகரித்து சரும செல்களை புத்துணர்ச்சியுடன் வைத்துக் கொள்ளலாம்.
எவ்வளவுக்கு எவ்வளவு தண்ணீர் மற்றும் நீர்ச்சத்துள்ள உணவுகளை எடுத்து வருகிறீர்களே அவ்வளவுக்கு முதுமையைத் தள்ளிப் போடலாம்.
தக்காளியில் ஆன்டி-ஆக்ஸ்டன்ட்டுகள் மட்டுமன்றி நீர்ச்சத்தும் அதிகம் உள்ளது. எனவே இவற்றை உணவில் அதிகம் சேர்த்து வந்தாலோ அல்லது ஜீஸ் போட்டு தினமும் ஒரு கிளாஸ் குடித்து வந்தாலோ சரும செல்கள் புத்துணர்ச்சி பெறும்.
கீரைகள் அனைத்துமே மிகவும் ஆரோக்கியமானது. அதிலும் பசலைக்கீரை உணவில் சேர்த்து வந்தால், அதில் உள்ள விட்டமீன்கள், கனிமச்சத்துக்கள் மற்றும் நீர்ச்சத்துக்களால் சருமம் மட்டுமன்றி உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.
முள்ளங்கியில் ஆன்டி-ஆக்ஸ்டன்ட்டுகள் மற்றும் நீர்ச்சத்து அதிகம் உள்ளது. எனவே இவற்றை உட்கொண்டு வந்தாலும் முதுமையைத் தள்ளிப் போடலாம். தினமும் ஒரு வெள்ளரிக்காய் சாப்பிட்டு வந்தால் சருமத்திற்கு வேண்டிய நீர்ச்சத்து கிடைக்கும். மேலும் இது உடலை குளிர்ச்சியாகவும் வைத்துக் கொள்ளும்.
Related Posts :
- Back to Home »
- ஆரோக்கியத்தை சொல்லும் »
- என்றும் இளமை வேண்டுமா? இதோ வழிமுறைகள்....

