Posted by : Author
Friday, 1 July 2016
Human Papilloma Virus (HPV) இன் நிலையான தொற்று பெண்களில் கருப்பை, கருவாய் மற்றும் குத புற்றுநோய்(Cervical, Vulvar, VaginalCancer) தாக்கத்தை அதிகரிப்பதாக தெரிய வருகிறது.
இது பற்றி ஆய்வாளர் Susanne Kruger Kjaer கூறுகையில், ஏற்கனவே HPV தொற்றுக்கும், கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்குமிடையிலான தொடர்புகள் அறியப்பட்டிருந்தாலும், இவ் ஆய்வில் பெறப்பட்ட முடிவுகள் குத மற்றும் பிறப்புறுப்புக்களில் உண்டாகும் புற்றுநோய் பற்றிய மேலதிக தகவல்களை தருவதாக சொல்கிறார்.
HPV vaccine ஆனது முற்காப்பு நடவடிக்கையாகும்.
HPV தொற்றை அதன் ஆரம்ப கட்டத்திலேயே கட்டுப்படுத்துவதன் மூலம் அதன் நீண்டகால தாக்கத்தினால் உண்டாகும் இது போன்ற நோய் நிலைமைகளை கட்டுப்படுத்த முடியும் என இவ் ஆய்வின் போது கண்டறிப்பட்டதாக Kjaer சொல்கிறார்.
முன்னைய ஆய்வுகளில் சில வகை HPV தொற்று புற்றுநோய்களை (CIN) ஏற்படுத்தியது வெளிப்படுத்தப்பட்டிருந்தது.
இதில் கருப்பை கழுத்து பகுதி மேற்புறத்தில் அசாதாரண கல வளர்ச்சிகள் அவதானிக்கப்பட்டிருந்தது. CIN3 ஆனது மேலும் உக்கிரமானது.
இது பற்றி மேலும் Kjaer கூறுகையில் HPV தொற்றினால் ஏற்படும் பெரும்பாலான CIN நோய் நிலைமைகள் பொதுவாக 1 அல்லது 2 வருடங்களுக்கிடையில் தாமகவே உடலால் நீக்கப்பட்டுவிடுகின்றன.
ஆயினும் மிக உக்கிரமான CIN2 அல்லது CIN3 தொற்றானது இலகுவில் நீக்கப்பட முடியாதவை.
இவை மிகப்பெரிய அளவில் கருப்பை மற்றும் குத புற்றுநோய்களை தோற்றுவிப்பதாக சொல்கிறார்.
Related Posts :
- Back to Home »
- ஆரோக்கியத்தை சொல்லும் »
- கருப்பை புற்றுநோய்த் தாக்கத்தை அதிகரிக்கும் HPV தொற்று...

