Posted by : Author Friday, 1 July 2016


ஏற்கனவே குருதி கோளாறுகளுக்கெதிராக பயன்பாட்டிலுள்ள ஒரு குறித்த வகை மருந்து ஞாபக சக்தியையும் அதிகரிப்பதாக புதிய ஆய்வுகள் மூலம் தெரிய வருகிறது.

பொதுவாக பயன்படுத்தப்படும், விலை குறைந்த Methylene blue இன் சிறிய அளவு மூளையின் செயற்றிறனை கூட்டி குறுகிய கால ஞாபக சக்தி மற்றும் அவதானத்தை அதிகரிப்பதாக சொல்லப்படுகிறது.

Methylene blue ஆனது Methemoglobinemia எனும் குருதி கோளாறுக்கெதிராக பயன்படுத்தப்பட்டுவருகிறது.

இந் நோய் நிலைமையின் போது ஒட்சிசனானது உடல் கலங்களுக்கு வினைத்திறனான வழங்கப்பட முடியாது போகின்றது.

Methylene blue இன் மூளை ஞாபகசக்தியை அதிகரிக்கும் தன்மை 1970 களில் எலிகளில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகள் மூலம் கண்டறியப்பட்டிருந்தது.

இம்முறை இம் முயற்சி மனிதர்களில் மேற்கொள்ளப்பட்டிருந்தது. இதற்கென 26 ஆரோக்கியமான, 22 - 62 வயதுக்கிடைப்பட்டோர் தேர்வுசெய்யப்பட்டிருந்தனர்.

மேற்படி பரிசோதனையிலிருந்து Methylene blue ஆனது மூளையின் குறித்த பகுதிகளை ஒழுங்கமைப்பது தெரிய வருகிறது. இவ் ஆய்வு முடிவுகள் Radiology எனும் ஆய்வுப் பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

Welcome to My Blog

- Copyright © மருத்துவம் -New Mannar- Powered by New Mannar - Designed by New Mannar -