Posted by : Author
Friday, 1 July 2016
தினமும் காலையில் காபியுடன் உங்கள் நாளை தொடங்குபவரா நீங்கள்? அதன் மணமும் சுவையும் உங்களை கட்டிப்போட்டுவிட்டது என்னவோ உண்மைதான்.
மூளைக்கு புத்துணர்ச்சி தந்து பல மடங்கு வேலையை செய்யத் தூண்டும்.
சில நேரத்திற்கு பிறகு மீண்டும் ஒரு காபியை உங்கள் மனம் குடிக்கச் சொல்லும்.
அப்படியெனில் நீங்கள் காபிக்கு அடிமை. காபி குடிப்பதால், உடனடியாக எனர்ஜி கிடைத்தாலும், அதை அடிக்கடி குடித்தால் உடலுக்கு நல்லதல்ல.
அதற்கு பதில் சிறந்த சாய்ஸாக இருப்பது க்ரீன் டீ தான்.
க்ரீன் டீ செக்ஸ் ஹார்மோன்களை ஊக்குவித்து பாலுணர்வைத் தூண்டும்.
உடலில் தொற்றிக்கொள்ளும் கிருமிகளை க்ரீன் டீ அழிப்பதோடு, ரத்தத்தில் கலக்கும் நச்சுக்களையும் வெளியேற்றும்.
க்ரீன் டீ இன்சுலின் சுரப்பை தூண்டி, ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டிலேயே வைத்திருக்க உதவுகிறது.
க்ரீன் டீயில் நிறைய ஆன்டி ஆக்ஸிடென்ட் இருக்கின்றன. அவை உடலில் உருவாகும் பல புற்று நோய்களை தடுக்கக் கூடியவை. ஆகவே தினமும் க்ரீன் டீ குடிப்பதை ஒரு கட்டாய பழக்கமாகவே நீங்கள் வைத்துக் கொள்ளலாம்.
தினமும் க்ரீன் டீ குடித்து வந்தால், உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் கரைந்து உடல் எடை குறையும்.
க்ரீன் டீயில் உள்ள ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் வலிப்பு மற்றும் இதய நோய்கள் வருவதை குறைப்பதில் முக்கிய பங்காற்றுகின்றன.
Related Posts :
- Back to Home »
- ஆரோக்கியத்தை , சொல்லும் »
- புற்றுநோயை தடுக்கும் கிரீன் டீ!

