Posted by : Author
Thursday, 28 July 2016
விஞ்ஞானிகள் தற்போது மூளை பாதிக்கப்பட்டு கோமா நிலையிலிருக்கும் ஒருவர், ஒரு வருடத்துக்குள் மீண்டு திரும்புவாரா என அறியும் வழியொன்றைக் கண்டுபிடித்துள்ளனர்.
சில வகையான நோயாளிகள் எந்தவொரு செயற்பாடற்ற நிலையில் காணப்பட்டாலும் அவர்கள் மீள பழைய நிலைமைக்கு திரும்பிவிடுகின்றனர்.
ஆனாலும் ஒருவருடைய நிலையை சரியாக அறியக்கூடிய, அதை ஊகிக்கக்கூடிய தன்மை மிக சவாலாகவே இருந்து வந்தது.
தற்போது விஞ்ஞானிகள் ஒருவருடைய மூளை கொள்முதல் செய்யும் குளுக்கோஸின் அளவை வைத்து ஒருவரின் தற்போதைய நிலையை அறிந்துகொள்ள முடியும் என கண்டுபிடித்துள்ளனர்.
அதே நேரம் அவர்கள் ஒரு வருட காலத்துக்குள் மீண்டுவிடுவாரா என்பதையும் எதிர்வு கூற முடியும் என்கிறார்கள்.
இதற்கென 131 மூளை பாதிக்கப்பட்டு முழுதாக கோமா நிலைக்குச் சென்ற, பகுதியாக கோமா நிலைக்குச் சென்ற நோயாளிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இங்கு அநுசேபிக்கப்பட்ட குளுக்கோஸின் அளவானது தொழிற்பாட்டு மூலகத்தின் உதவியுடன் படம்பிடிக்கப்பட்டு அளவிடப்பட்டிருந்தது.
இதன் போதே மூளையின் செயற்பாடு அது கொள்முதல் செய்யும் குளுக்கோஸின் அளவுடன் சம்பந்தப்பட்டிருப்பது தெரிய வந்திருக்கிறது.
அத்துடன் சாதாரண மூளை குளுக்கோஸ் அநுசேபத்தின் 42 வீதமான அநுசேபம் நடைபெறுபவர்கள் முழுதாக மயக்க நிலையில் இருப்பது இனங்காணப்பட்டது.
இதை விட கூடுதலான அநுசேபம் நடைபெறுபவர்கள் 1 வருட காலத்திற்குள் மீளுவது இனங்காணப்பட்டிருந்தது.
Related Posts :
- Back to Home »
- ஆரோக்கியத்தை சொல்லும்.... »
- கோமா நோயாளியால் ஒரு வருடத்துக்குள் மீள முடியுமா? - அறிய புதிய முறை....

