Posted by : Author Thursday, 28 July 2016


புதிய ஆய்வொன்று வகை-2 நீரிழிவு நோயால் பாதிக்கப்படும் நோயாளர்களில் இதயத் தாக்கு மற்றும் இதய செயற்பாடற்றுப் போதல் போன்ற நோய் நிலைமைகளை Flu vaccine கட்டுப்படுத்துவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இவ் ஆய்வில் Influenza vaccination க்கு உட்படுத்தப்பட்டோரில் இறப்பு வீதம் 24 சதவீதத்தால் குறைவடைந்தது அவதானிக்கப்பட்டிருக்கிறது.

பொதுவாக வகை-2 நீரிழிவு நோயாளர்களில் வருடாவருடம் Flu இறப்பு நிகழ்வதுண்டு என ஆய்வாளர் Eszter Vamos சொல்கிறார்.

ஆனாலும் இந்த vaccine ஆனது நீண்டகாலத்திற்கு நோயாளிக்கு நன்மை தரக் கூடியது என சொல்லப்படுகிறது.

இது இதயத் தாக்கு, இதய அடிப்பை நிறுத்துவது மட்டுமல்லாது, Flu நோய்க் காலங்களில் இறப்புகள் ஏற்படுவதையும் தடுக்கிறது.

வகை-2 நீரிழிவு நோயாளர்கள் தங்கள் குருதி வெல்ல அளவைக் கட்டுப்படுத்த முடியாமல் போகின்றது.

இவ்வகையான நோய்களுக்கு ஆளாவோர் பொதுவாக இதய நோய்களுக்கு ஆளாவதுண்டு. இது உயர் குருதி வெல்லங்கள் குருதிக் குழாய்களை அடைப்பதாலேயே உருவாகின்றது.

இதனால் இதய தாக்கு, அடிப்பு நோய்கள் உருவாகின்றது. இதன் விளைவு Flu நோய்க் காலங்களில் மேலும் அதிகரிக்கின்றது.

இவ் ஆய்வுக்கென நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்த 124 503 பிரித்தானிய இளைஞர்கள் 2003 - 2010 காலப்பகுதிகளில் பரிசீலிக்கப்பட்டிருந்தனர்.

இவர்களில் 65 வீதமானோர் Flu vaccine க்கு உட்படுத்தப்பட்டிருந்தனர்.

Flu vaccine க்கு உட்படுத்தப்பட்ட 30 வீதமானோரில் வைத்தியசாலைக்கு போகும் தன்மை குறைவாக இருந்தமையும், 22 வீதமானோரில் இதய செயற்பாடற்றுப் போகும் தன்மை குறைவடைந்மையும், 15 வீதமானோரில் pneumonia அல்லது influenza நோய் குறைவடைந்தமையும் அவதானிக்கப்பட்டது.

அத்தோடு 24 வீதமான இறப்பு வீதம் குறைவடைந்தமையும் அவதானிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விடயங்கள் CMAJ (Canadian Medical Association Journal) எனும் பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

Welcome to My Blog

- Copyright © மருத்துவம் -New Mannar- Powered by New Mannar - Designed by New Mannar -