Posted by : Author
Thursday, 28 July 2016
அளவான தூக்கமின்மை மற்றும் தூக்கத்தின் போது ஏற்படும் இடையூறுகள், குழந்தைகளுக்கு பிற்காலங்களில் மன அழுத்தங்கள், பதற்றம் போன்ற நோய்களை ஏற்படுத்தக் கூடியது என ஆய்வுகள் சொல்கின்றன.
அதாவது குழந்தைகளின் மன நிலையான நல் வாழ்விற்கு, ஆரோக்கியமான தூக்கம் மிக அவசியம் என Houston பல்கலைக்கழக பேராசிரியர் Candice Alfano சொல்கிறார்.
தொடர்ச்சியாக ஏற்படும் போதியளவு தூக்கமின்மை படிப்படியாக மன அழுத்தங்கள், பரபரப்பாதல் நிலைமைகளை தோற்றுவிக்கும் என Alfano மேலும் சொல்கிறார்.
இப் பரிசோதனை தற்காலிகமாக நித்திரை கட்டுப்படுத்தப்பட்ட, 7-11 வயதுக்கிடைப்பட்ட 50 பிள்ளைகளில் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இங்கு நித்திரையின் தாக்கம் பிள்ளைகளில் எதிர்மறை விளைவுகளை மட்டுமன்றி, அவர்களில் சாதகமான விடயங்களிலும் மாற்றங்களை ஏற்படுத்துவது கண்டறியப்பட்டுள்ளது.
உதாரணத்திற்கு, இரு நாட்கள் சரியாக தூக்கமில்லாத பிள்ளைகள் அவர்கள் விரும்பும் பொருட்களுக்கு குறைந்தளவான சந்தோசங்களையும், அவர்களது விடயங்களை ஞாபகப்படுத்துவதில் கஸ்டங்களை அனுபவிப்பது இனங்காணப்பட்டுள்ளது.
இதன்படி பிள்ளைகளுக்கு போசாக்கு எவ்வளவு முக்கியமோ, அதேபோல் நித்திரையும் முக்கியம் என பெற்றோர்கள் கருத வேண்டும்.
Related Posts :
- Back to Home »
- ஆரோக்கியம் »
- தூக்கமின்மை குழந்தைகளில் பிற்காலத்தில் மன அழுத்தங்களை ஏற்படுத்தலாம்!

