Posted by : Author Wednesday, 30 March 2016


நாம் அன்றாடம் உள்ளெடுக்கும் உணவுப் பொருட்களுள் அதிகளவானவை கடைகளில் பிளாஸ்டிக் பாத்திரங்களில் வைத்தே விற்பனை செய்யப்படும்.
இவ்வாறு உணவுப் பொருட்கள் பிளாஸ்டிக் பாத்திரங்களில் வைக்கப்பட்டிருக்கும்போது குறித்த பாத்திரங்களில் காணப்படும் மேற்பூச்சானது உணவுப் பொருட்களுடன் கலந்துவிடுகிறது.

இவ் உணவை உள்ளெடுப்பதால் கர்ப்பிணித் தாய்மார்களில் குறைப்பிரசவம் ஏற்படும் என ஆய்வு ஒன்றிலிருந்து அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவின் டெக்ஸாஸ் பல்கலைக்கழகத்தின் மருத்துவப் பிரிவில் பணியாற்றும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ராம்குமார் மேனன் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்விலேயே இந்த தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த அவர்கள் பிளாஸ்டிக் பூச்சில் காணப்படும் Bisphenol A, அல்லது BPA எனும் பதார்த்தம் கர்ப்பிணித் தாய்மார்களின் இரத்தத்தில் கலப்பதனாலேயே இந்த குறைப்பிரசவம் நிகழ காரணமாக இருக்கின்றது” என எச்சரித்துள்ளனர்.

Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

Welcome to My Blog

- Copyright © மருத்துவம் -New Mannar- Powered by New Mannar - Designed by New Mannar -