Posted by : Author
Wednesday, 30 March 2016
தலையில் அதிக பொடுகு மற்றும் பேன் தொல்லையால் அவதியுறுபவர்களின் தலையில் வியர்க்கும் போது மோசமான துர்நாற்றம் வீசும்.
இதனை போக்க செய்கை வழிகளை பின்பற்றாமல், இயற்கை வழிகளை பின்பற்றுவது நன்மை பயக்கும்.
பேக்கிங் சோடா

உங்கள் முடியில் துர்நாற்றம் வீசினால், பேக்கிங் சோடாவைப் பயன்படுத்துங்கள். ஏனெனில் பேக்கிங் சோடா எண்ணெய் பசையைக் கட்டுப்படுத்துவதோடு, துர்நாற்றத்தையும் தடுக்கும். அதற்கு 3 பங்கு நீரில் 1 பங்கு பேக்கிங் சோடா சேர்த்து கலந்து, ஈரமான முடியில் தடவி 5 நிமிடம் கழித்து, நீரில் அலசுங்கள்.
தக்காளி

தக்காளியை அரைத்து பேஸ்ட் செய்து, ஸ்காப்பில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து, பின் ஷாம்புவால் அலச வேண்டும். இதனால் ஸ்கால்ப்பின் pH அளவு சீராக பராமரிக்கப்பட்டு, துர்நாற்றம் வீசுவது தடுக்கப்படும்.
ஆப்பிள் சீடர் வினிகர்

ஆப்பிள் சீடர் வினிகரை நீரில் கலந்து, அத்துடன் லாவெண்டர் அல்லது ரோஸ் எண்ணெய் சேர்த்து கலந்து, அந்த கலவையால் தலையை மசாஜ் செய்து சிறிது நேரம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் அலசினால், தலையில் துர்நாற்றம் வீசுவது தடுக்கப்படும்.
லாவெண்டர் எண்ணெய்

லாவெண்டர் எண்ணெயில் ஆன்டி-பாக்டீரியல் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பொருட்கள் இருப்பதால், அவை ஸ்கால்ப்பில் ஏதேனும் தொற்றுகள் இருந்தால் அதை சரிசெய்யும். அதற்கு தலைக்கு குளித்து முடித்த பின்னர், முடியை நன்கு உலர வைத்து, பின் இந்த எண்ணெய்யை தலைக்கு தடவ வேண்டும்.
ஆரஞ்சு

ஆரஞ்சு பழத்தின் தோலை நீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்த நீரை குளிர வைத்து, பின் அந்நீரினால் தலைமுடியை அலச, தலையில் இருந்து வீசும் துர்நாற்றம் நீங்கும்.
Related Posts :
- Back to Home »
- தலையில் துர்நாற்றம் »
- தலையில் துர்நாற்றம் வீசுகிறதா?

