Posted by : Author
Saturday, 20 February 2016
காலையில் எழுந்தவுடன் காபி, டீ குடிக்கலேனே நாளே விடியாது என்று சொல்பவர்கள் ஏராளம்.
ஆனால் தொடர்ந்து குடிப்பதன் மூலம் காபி, டீக்கு அடிமையாவது மட்டுமின்றி பல்வேறு நோய்களுக்கும் வழிவகுத்து விடுகிறோம்.
எனவே இதற்கு பதிலாக தண்ணீரை குடிப்பதன் மூலம் ஆரோக்கியமாக இருக்கலாம்.
* தண்ணீரை அதிகம் குடிப்பதன் மூலம் சிறுநீரகம் மற்றும் கல்லீரலில் உள்ள டாக்ஸின்கள் அதிகம் வெளியேற்றப்படும், இதனால் பல்வேறு நோய்களில் தாக்குதலில் இருந்து விடுபடலாம்.
* அதுமட்டுமின்றி கலோரிகளின் அளவு குறைந்து உடல் எடையையும் குறையும் வாய்ப்புள்ளது.
* மூட்டுகளுக்கு அருகே உள்ள குருத்தெலும்புகளின் உருவாக்கத்திற்கு தண்ணீர் மிகவும் அவசியமாகிறது.
* போதுமான அளவு தண்ணீரை குடிப்பது இரத்த ஓட்டத்தை சீராக வைப்பதுடன் ரத்த அழுத்தத்தையும் கட்டுக்குள் வைக்கிறது.
* குறிப்பாக சரும செல்களுக்கு தேவையான நீர்ச்சத்து கிடைப்பதால் ஆரோக்கியமாக நீண்ட நாட்கள் சருமம் பொலிவுடன் இருக்கும்.
Related Posts :
- Back to Home »
- ஆரோக்கிய வாழ்வு , வெந்நீர் »
- காபி, டீக்கு குட்பை சொல்லுங்க!

