Posted by : Author
Saturday, 20 February 2016
சூடான தண்ணீர் குடிக்கலாமா? அதனை எப்போதும் குடிக்கலாம்? என்பது பற்றிய ஏராளமான சந்தேகங்களும், அதற்கான பதில்களும் வெளிவந்து கொண்டுதான் இருக்கின்றன.
நாம் உண்ணும் உணவு செரிமானமாவதற்கு உடலில் உள்ள சுரப்பிகள் சில என்சைம்கள் மற்றும் அமிலங்களை சுரக்கின்றன.
ஆதலால் உணவு உட்கொண்ட பின்னர் 15 அல்லது 20 நிமிடங்களுக்கு பின்னரே தண்ணீர் அருந்த வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.
இளம் சூடான தண்ணீர் அருந்துவதால் புற்றுநோய் செல்கள் உருவாவதை தடுக்கின்றன, சூடான தண்ணீர் அருந்துவதால் உணவானது எளிதில் செரிமானமாவதோடு உடலுக்கு கேடு விளைவிக்கும் கெட்ட கொழுப்புகளை தடுக்கிறது.
குளிர்ச்சியான தண்ணீர் அருந்துவது உடலுக்கு எதிர்மறையான செயல்பாடுகளை ஏற்படுத்தும், சாப்பிட்டு முடித்த பின்னர் குளிர்ச்சியான தண்ணீர் அருந்தினால், நம் உணவில் உள்ள எண்ணெய் துகள்கள் கெட்டியாகி விடுவதால் சாப்பிட்ட உணவு செரிமானம் ஆவதில் பிரச்சனை ஏற்படுவது மட்டுமல்லாமல் நமது உடலில் உள்ள கொழுப்பின் அளவை அதிகரிக்கவும் செய்கிறது.
மேலும், இதய நோய்கள் மற்றும் சிறுநீரக பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்பிருக்கிறது, எனவே வெதுவெதுப்பான தண்ணீரையே குடியுங்கள்.
Related Posts :
- Back to Home »
- உணவே மருந்து , வெந்நீர் »
- சாப்பிட்டவுடன் சூடான தண்ணீர் அருந்தலாமா?

