Posted by : Author
Saturday, 20 February 2016
பெண்கள் 40 அல்லது அதற்கு மேற்பட்ட வயதில் கர்ப்பமானால், அவர்களுக்கு எதிர்காலத்தில் மாரடைப்பு, பக்கவாதம் உள்ளிட்ட உயிரை பறிக்கும் நோய்கள் உருவாகும் ஆபத்து உள்ளதாக பிரித்தானிய மருத்துவர்கள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர்.
அமெரிக்காவின் லோஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள ‘American Stroke Association’ என்ற அமைப்பின் சார்பில் நேற்று மருத்துவம் தொடர்பான ஆய்வு கூட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது.
இந்த ஆய்வு கூட்டத்தில் பிரித்தானியாவை சேர்ந்த மருத்துவக்குழுவினர் பங்கேற்று பெண்கள் கர்ப்பமாவதால் ஏற்படும் நன்மை/தீமைகள் குறித்து ஆய்வறிக்கை ஒன்றை தாக்கல் செய்துள்ளனர்.
இதில் சராசரி வயதுடைய, அதாவது இளம் பெண்கள் கர்ப்பமாகும் வயதை விட 40 அல்லது அதற்கு மேல் வயதுடைய பெண்கள் கர்ப்பமானல், அவர்களுக்கு பக்கவாதம், மாரடைப்பு மற்றும் இதயம் தொடர்பான நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவை சேர்ந்த 72,000 பெண்களிடம் இந்த ஆய்வு குறித்து தகவல் சேகரிக்கப்பட்டது. இவர்களில், 3,300 பெண்கள் 40 வயதிற்கு மேல் கர்ப்பமானதாக கூறியுள்ளனர்.
இவர்களில் இளைய வயது கர்ப்பிணி பெண்களுக்கு 2.4 சதவிகிதத்தில் பக்கவாதம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், 40 வயதிற்கு மேற்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு 3.8 சதவிகித பக்கவாதம் ஏற்படும் ஆபத்து உள்ளதாக தெரியவந்துள்ளது.
அதே சமயம், இளம் வயது கர்ப்பிணி பெண்களுக்கு 2.5 சதவிகித மாரடைப்பும், 40 வயதிற்கு மேற்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு 3.0 சதவிகித மாரடைப்பு ஏற்படும் வாய்ப்புள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
இதயம் தொடர்பிலான நோய் குறித்தான ஆய்வில், இளம் வயதினருக்கு 2.3 சதவிகித நோய்களும், 40 வயதிற்கு மேற்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு 3.9 சதவிகித நோய்களும் ஏற்பட வாய்ப்புள்ளது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாடுகளில் கடந்த 2014ம் ஆண்டில் மட்டும் 4 சதவிகித குழந்தைகள் 40 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு பிறந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Related Posts :
- Back to Home »
- பெண்கள் »
- ‘’பெண்கள் 40 வயதில் கர்ப்பமானால் மாரடைப்பு ஏற்படும் ஆபத்து’’! அதிர்ச்சி தகவல்

