Posted by : Author
Saturday, 20 February 2016
சாதத்தை குக்கரில் சமைத்து சாப்பிடுவதை விட, வடித்த சாதம் சாப்பிடுவது தான் நல்லது.
அதுமட்டுமின்றி அப்படி வடித்த சாதத்தின் போது வடிகட்டிய நீரில் சத்துக்கள் அதிகமாக நிறைந்துள்ளது. சொல்லப்போனால் சாதத்தை விட, அந்த நீரில் அதிக சத்துக்கள் நிறைந்துள்ளது எனலாம்.
சாதம் வடிச்ச கஞ்சி தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!
1. சாதம் வடித்த கஞ்சி தண்ணீரைக் குடித்தால், உடலின் ஆற்றல் தக்க வைக்கப்படும்.
2. சாதம் வடித்த கஞ்சி தண்ணீர் இரைப்பைக் குடல் அழற்சியைத் தடுக்கும். ஆகவே அவ்வப்போது சாதம் வடித்த கஞ்சி தண்ணீரைக் குடித்து வாருங்கள்.
3. சாதம் வடித்த கஞ்சி தண்ணீர் உடலின் வெப்பநிலையை சீராக பராமரிக்க உதவும்.
4. வடிச்ச கஞ்சி தண்ணீரை ஒருசில புற்றுநோயின் வளர்ச்சியைத் தடுக்கும் திறன் கொண்டவை. ஆகவே புற்றுநோய் உள்ளவர்கள் இதனை குடித்து வந்தால், புற்றுநோயின் வளர்ச்சியைத் தடுக்கலாம்.
5. சாதம் வடித்த கஞ்சித் தண்ணீர் மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கும். எப்போது நீங்கள் மலச்சிக்கலால் அவஸ்தைப்படுகிறீர்களோ, அப்போது ஒரு டம்ளர் சாதம் வடித்த கஞ்சி தண்ணீரைக் குடித்தால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.
6. சாதம் வடித்த கஞ்சி தண்ணீரில் கார்போஹைட்ரேட் வளமையாக நிறைந்துள்ளது. ஆகவே உடல் எடையை அதிகரிக்க நினைப்போர் சாதம் வடித்த கஞ்சி தண்ணீரை தினமும் குடித்து வந்தால், நல்ல மாற்றத்தை விரைவில் காணலாம்.
7. சாதம் வடித்த கஞ்சி தண்ணீரில் உள்ள ஓரிசனோல் என்னும் பொருள், சூரியனின் புறஊதாக் கதிர்களில் இருந்து நல்ல பாதுகாப்பு தரும்
Related Posts :
- Back to Home »
- ஆரோக்கிய வாழ்வு , உணவே மருந்து »
- சாதம் வடிச்ச கஞ்சி தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!

