Posted by : Author
Thursday, 25 February 2016
உடலில் ஊட்டச்சத்து குறைபாடு அல்லது நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தால் உடல் சோர்வாக இருக்கும்.
இதனால் நம்மால் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இயங்க முடியாது, இதற்கு சில இயற்கை உணவுளை எடுத்துக்கொண்டாலே போதுமானது.
* அன்னாசிபழச்சாறுடன் மிளகுத்தூள் சேர்த்து அருந்தி வந்தால் உடல் சோர்வு குறையும். இதை தினமும் சாப்பிடலாம்.
* அன்னாசிப் பழம், தேங்காய் துருவல் சேர்த்து அரைத்து தேன் கலந்து சாப்பிட உடல் சோர்வு குறையும். இதை காலையில் சாப்பிடும் கூடுதல் பலன் கிடைப்பதை காணலாம். அன்றைய தினம் முழுவதும் சுறுசுறுப்பாக வேலை செய்ய முடியும்.
* மிளகை நெய்யில் வறுத்து தூள் செய்து வெல்லம் சேர்த்து சாப்பிட்டுவர உடல் சோர்வு குறையும்.
* உலர்ந்த திராட்சையைப் பன்னீரில் ஊறவைத்து 2 மணி நேரம் கழித்துப் பிழிந்து அதன் ரசத்தைத் தொடர்ந்து 21 நாட்கள் சாப்பிட்டு வந்தால் படபடப்பு குறையும்.
* உலர்ந்த திராட்சைப் பழம், ஆரஞ்சுச் சாறு, ஒரு வாழைப்பழம் முதலியவற்றை தினமும் சாப்பிட்டு வந்தால் சுறுசுறுப்புடன் இருக்கலாம்.
* பேரீச்சம் பழங்களை தண்ணீரில் போட்டு ஊற வைத்து ஊறிய பேரீச்சம் பழத்தையும் அந்த தண்ணீரையும் அருந்த சோர்வு குறையும். இதை தினமும் செய்யலாம். தண்ணீரில் ஊறவைத்து குடிக்க பிடிக்காதவர்கள் சூடான பாலில் ஊறவைத்தும் சாப்பிடலாம்.
Related Posts :
- Back to Home »
- ஆரோக்கிய வாழ்வு »
- உடல் சோர்வாக இருக்கிறதா? இந்த உணவுகளை சாப்பிடுங்கள்!

