Posted by : Author
Thursday, 5 November 2015
சிறுநீரகத்தில் கற்கள் இருந்தால் எப்படி அவசியமாக வும், அவசரமாகவும் சிகிச்சை எடுத்துக்கொண்டு குணப் படுத்திக்கொள்கிறோமோ அதேபோல் பித்தப்பையிலும் கற்கள் வந்துவிட்டால் உடனடியாக சத்திரசிகிச்சை மேற்கொண்டு அகற்றிவிடவேண்டும். இல்லையெனில் பெரிய ஆபத்து ஏற்படலாம். பித்தப்பையில் கற்கள் எப்படி உருவாகிறது? என்று தானே யோசிக்கத் தொடங்கு கிறீர்கள். அதற்கான பதிலை தற்போது காண்போம்.
பித்தப்பை என்பது கல்லீரலில் உற்பத்தியாகும் பித்த நீரை குடலுக்கு எடுத்துச் செல்லும் பித்த நாளத்தில் ஒட்டியுள்ள சிறிய பை போன்ற ஒரு உறுப்பு. இது கல்லீரலுக்கு கீழ் பகுதியில் அமைந்திருக்கிறது.
இந்த பித்தப்பையானது கல்லீரலிலிருந்து உற்பத்தியாகும் பித்த நீர் என்ற ஜீரண நீரை இரண்டு முறை உணவுக்கு இடையே சேமித்து வைக் கிறது.
இந்த ஜீரண நீர் ஒரு நாளில் அதிகபட்சமாக எழுநூறு மில்லியளவிற்கு உற்பத்தியாகிறது. ஆனால் பித்தப் பையின் கொள்ளளவோ அதிகபட்சமாக அறுபது மில்லியனளவிற்கே இருக்கும்.
நாம் உணவு சாப்பிட்ட பின் இந்த பை சுருங்குவதால் இதில் சேமித்து வைக்கப்பட்ட ஜீரண நீர் குடலைச் சென்றடைகிறது.
நீங்கள் சாப்பிடும் உண வில் அதிகளவில் கொழுப்பு சத்து இருப்பதாலும், அடிக் கடி கருத்தடை மாத்திரைகளை சாப்பிடுவதாலும் தான் பித்தப்பையில் கற்கள் தோன்றுகின்றன. பித்தப்பையில் சேரும் கற்களை கொழுப்பு கற்கள் என்றும், பித்த நீர் பை பாக்டீரியாவால் பாதிக்கப்படும் ஏற்படும் கற்கள் என்றும், இவ்விரண்டும் சேர்ந்தும் உருவாக்கும் கற்கள் என்று மூன்று வகைகளில் கற்களை பிரித்திருக்கிறார்கள்.
பொதுவாக பித்தப்பை கற்கள், பெண்கள், உடல் பருமன் உள்ளவர்கள், வாய்வுத் தொல்லை உள்ளவர்கள், குழந்தை பேறுள்ளவர்கள், நாற்பது வயதை கடந்தவர்கள் ஆகியவர்களுக்கு தான் அதிகம் வரும் என்று கூறு கிறார்கள்.
சாப்பிட்ட பிறகு வயிற்றின் மேல்பாகத்தில் வலப் புறம் வலி உண்டாதல், மஞ்சள் காமாலை, மிகக் கடின மான வயிற்று வலி ஆகியவை இப்பிரச்சினைக்கான அறி குறிகளாகும். இந்த அறிகுறிகள் வந்தவுடன் உடனடியாக அல்ட்ரா சவுண்ட் பரிசோதனை மூலம் கண்டறிந்து உறுதிப்படுத்திக்கொள்ளவேண்டும். ஒரு சிலருக்கு மட்டுமே சிடி ஸ்கேன் எம்ஆர்ஐ ஸ்கேன் பரிசோதனை அவசியப்படும்.
பித்தப்பை கற்கள் இருப்பது உறுதி என்று பரி சோதனையில் தெரியவந்தவுடன் தகுதி வாய்ந்த் சத்திர சிகிச்சை நிபுணர் ஒருவர் மூலம் சிகிச்சை மேற் கொள்வது நல்லது. இதனை அலட்சியப்படுத்தினால் பித்தப்பை கற்கள் பித்த நாளத்தில் விழுந்து அதனை அடைத்துக்கொள்ளும். இதனால் மஞ்சள் காமாலை உருவாக சாத்தியமுண்டு. வேறு சிலருக்கு பான் கிரியாட்டீஸ் எனப்படும் கணைய அழற்றி நோய் ஏற்படலாம். இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கடுமையான வயிற்று வலி தொடர்வதுடன் சிறுநீரகம், நுரையீரல் போன்ற உறுப்புகளும் பாதிப்படையும்.இதனை அகற்றாமல் நாள் கடத்தினால் அதுவே புற்று நோய் கட்டியாகவும் மாற வாய்ப்புள்ளது. மேலும் இதனை சத்திரசிகிச்சை செய்து அகற்றாவிட்டால் பித்தப்பை அழுகிவிடவும் சாத்தியமுண்டு.
இந்நிலையில் பித்தப்பை கற்களை அகற்றவும், பித்த நாளத்தில் ஏற்பட்ட அடைப்பு களை நீக்கவும் தற்போது இ ஆர் சி பி (Endoscopic Retrograde Cholangiopancreatography )என்கிற நவீன சத்திர சிகிச்சை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, இவ்வித சிகிச்சையில பெரும் பான்மையானவர்களுக்கு வெற்றி வீதம் உறுதிப்படுத்தப்படுகிறது. மிகச்சிலருக்கே லேப்றாஸ்கோப்பி மூலம் சத்திர சிகிச்சை அவசியமாகிறது.
பித்தப்பையில் கற்கள் அதிகமாகிவிட்டாலோ அல்லது பித்தப்பை தன்னுடைய இயல்பான பணியான சுருங்கி விரியும் தன்மையை இழந்து அழுகிவிட்டாலோ அதனை பழுது நீக்கி வைத்திருப்பதை விட அதனை அகற்றுவதே மேல் என்று மருத்துவர்கள் பரிந்து ரைக்கிறார்கள். இதனால் எந்தவித பாதிப்போ பின் விளைவோ வருவதில்லை. ஏனெனில் இப்படி கெட்டுப் போன பித்தப்பையால் கூட கற்கள் உருவாகக்கூடும். மேலும் சிதிதமடைந்த பித்தப்பையால் மேலும் பல உடலுறுப்புகளுக்குத்தான் கேடு நிகழும். அப்பெண்டிக்ஸ் பாதிப்பு ஏற்படும் போது குடல் வாலை சத்திர சிகிச்சை மூலம் அகற்றுகிறோமல்லவா, அதேபோல் பித்தப்பையையும் அகற்றிவிடலாம். இதனால் எந்த பின்விளைவும் ஏற்படப்போவதில்லை.
டாக்டர். M. மணிமாறன், M.S.,
தொகுப்பு: அனுஷா