Posted by : Author
Sunday, 8 November 2015
தாவரப்பெயர் -: STEVIA REBAUDIANA.
பயன்தரும் பாகங்கள் -: இலை மற்றும் தண்டு.
வேறு பெயர்கள் -: “HONEY-LEAF”, “SWEET LEAF”, “SWEET-HERB”. போன்றவை.
சர்க்கரைத்தளசி 2 அடி முதல் 3 அடி உயரம் வரை வளரக்கூடியது. சர்க்கரைத்துளசியின் இலைகள், தண்டுகள் சர்க்கரை போன்று இனிப்பாக இருக்கும். இதில் கலோரீஸ் எதுவும் கிடையாது.
அதனால் இதை சர்க்கரை வியாதியைக் குணப்படுத்த இதை அதிகமாகப் பயன்படுத்திகிறார்கள். இதிலிருந்து மாத்திரைகள் செய்கிறார்கள், எண்ணெய் எடுக்கிறார்கள் பொடியாகவும், பச்சை இலையாகவும் மருத்துவத்தில் பயன்படுத்துகிராகள். இதன் பொடியை காபி, டீ மற்றும் சோடாக்களில் பயன்படுத்துகிறார்கள்.
இந்த இலை இனிப்பில் சர்க்கரையைவிட 30 மடங்கு அதிகம். இதனால் வயிற்றுப் போக்கு மற்றும் சிறு வியாதிகள் குணமடைகின்றன. இது ‘பிளட் சுகர்,’ இரத்த அழுத்தம் குறைவாக இருப்பது போன்ற வியாதிகளைக் குணப்படுத்தும். இதையையே ஜப்பானில் வயிற்று உப்பல், பல் வியாதிகளுக்குப் பயன்படுத்துகிறார்கள். இது ‘ஆண்டி பாக்டீரீயாவாகப்’ பயன்படுகிறது. இது சர்க்கரைக்கு மாற்றாக உள்ள ஒரு நல்ல மூலிகையாகும்.
Related Posts :
- Back to Home »
- அழகு , ஆரோக்கிய வாழ்வு »
- வயிற்றுப் போக்கை குணப்படுத்தும் சர்க்கரைத்துளசி...

