Posted by : Author
Thursday, 5 November 2015
தூங்கி எழுந்தவுடன் மிக ஆனந்தமாக கைவிரல்கள், கழுத்து, இடுப்பு என்று அனைத்து மூட்டு இணைப்புகளிலும் நெட்டி முறிப்பது சிலரது வழக்கம். இன்னும் சிலர் மூளையைக் கசக்கக்கூடிய வேலைகளுக்கு இடையில் அடிக்கடி நெட்டி முறிப்பதைப் பார்த்திருப்போம். இது நல்லதா? கெட்டதா?
அமெரிக்க எலும்பு அறுவை சிகிச்சை நிபுணர்கள் அகாடமியின் செய்தித் தொடர்பாளரும் எலும்பியல் வல்லுநருமான டாக்டர் லியோன் பென்சன் இதுபற்றி கூறுகையில்…“விரல் எலும்புகளின் மூட்டுகளுக்கு இடையில் சுற்றி வரும் ஒருவகையான திரவமே உங்களை நெட்டி எடுக்கத்தூண்டுகிறது. டென்ஷன் அதிகமாக இருப்பவர்களும் நெட்டி முறிப்பார்கள். மன அழுத்தம் உள்ளவர்களும், மனநோய் சிகிச்சையின் ஆரம்ப கட்டத்தில் உள்ளவர்களும் நெட்டி முறிக்கும் பழக்கம் உடையவர்களாக இருக்கிறார்கள்.
எப்போதோ ஒன்றிரண்டு முறை நெட்டி முறிப்பதால் மிகப்பெரிய விளைவு எதுவும் ஏற்படாது என்றாலும் அடிக்கடி தொடர்ந்து செய்யக்கூடாது. எந்தப் பழக்கமுமே அளவுக்கு அதிகமானால் ஆபத்தில்தான் முடியும். இரண்டு எலும்பு மூட்டுகளின் இடையில் உள்ள தசைநார்களே மூட்டுகள் உராய்வதைத் தடுக்கின்றன. தொடர்ந்து அவ்வாறு செய்யும்போது இந்த தசைநார்கள் கிழிந்துவிடும் அபாயம் உள்ளது. விரல்களை அளவுக்கு அதிகமாக மடக்கும் போது தசைநார்களின் வேலையை முடக்கிவிடும். அதுவே ஆர்த்ரைடிஸ் என்று சொல்லக்கூடிய முடக்குவாதம் வரக் காரணமாகிவிடும்” என்கிறார்.
Related Posts :
- Back to Home »
- ஆரோக்கிய வாழ்வு »
- அடிக்கடி நெட்டி முறிப்பவரா நீங்கள் ...?

