Posted by : Author
Thursday, 5 November 2015
நாம் அன்றாடம் பயன்படுத்தும் வாழைப்பழத்தில் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளன. எனவே, இது உடலுக்கு உகந்ததாக கருதப்படுகிறது. அத்தகைய சிறப்பு மிக்க வாழைப்பழத்தில் எய்ட்ஸ், மஞ்சள் காமாலை மற்றும் சளி, காய்ச்சலை குணப்படுத்தும் மருந்துவ குணம் உள்ளது என விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
அமெரிக்காவில் உள்ள மிச்சிகன் பல்கலைக் கழக நிபுணர்கள் வாழைப்பழத்தில் பனானா லெக்டின் அல்லது பான் லெக் எனப்படும் புரோட்டீன்கள் இருப்பதாக கண்டறிந்துள்ளார்கள்.
இவற்றை பகுப்பாய்வு செய்து பிரிக்கும்போது எய்ட்ஸ், மஞ்சள் காமாலை, சளிக்காய்ச்சலை உருவாக்கும் வைரஸ் கிருமிகளை அழிக்க கூடிய மருந்துக்களை தயாரித்துள்ளனர்.
கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பே இந்த மருந்து கண்டுபிடிக்கப்பட்ட போதிலும் எய்ட்ஸ் நோயாளிகளின் உடலில் இதை செலுத்திய போது பக்கவிளைவுகள் ஏற்பட்டன.
தற்போது இவற்றில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு எலிகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டபோது அதில் எந்த வித பக்க விளைவுகளும் ஏற்படவில்லை.
எனவே இதை எய்ட்ஸ் நோயாளிகளுக்கு பயன்படுத்த முடியும் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
Related Posts :
- Back to Home »
- உணவே மருந்து , மருத்துவம் »
- வாழைப்பழத்தில் இருந்து எய்ட்ஸ் நோய்க்கு மருந்து கண்டுபிடிப்பு...

