Posted by : Author
Thursday, 5 November 2015
உடல் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டுமானால், சரியான உணவுகளை உட்கொண்டு, தினமும் உடற் பயிற்சி செய்து வந்தால் போதும் என்று நினைப்பது தவறு.
அன்றாடம் நாம் மேற்கொள்ளும் பழக்கவழக்கங்களையும் கவனிக்க வேண்டும். குறிப்பாக ஆண்களின் உடல்நலம் தான் வேகமாக பாதிக்கப்படுகிறது. இவற்றிலிருந்து விடுபட என்ன செய்யலாம் என பார்ப்போம்.
அன்றாடம் கண்களை மூடிக் கொண்டு 10–-20 நிமிடம் தியானம் செய்து வந்தால், மனம் ஒருநிலைப்படுத்தப்பட்டு, தேவையில்லாத கவலைகள் அகலும். மேலும் தியானம் மன அழுத்தம் குறைய, நல்ல தூக்கம் கிடைக்க, இரத்த அழுத்தம் குறைய, நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்க, இதய செயற்பாடு மேம்பட உதவும்.
ஆண்கள் க்ரீன் டீயை தொடர்ச்சியாக குடித்து வந்தால், ஞாபக சக்தி அதிகரிக்கும். இரத்த அழுத்தம் குறையும், வாய் துர்நாற்றம் தடுக்கப்படும், நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
ப்ளாஷ் செய்வதன் மூலம் பற்களின் இடுக்குகளில் உள்ள அழுக்குகள் நீக்கப்பட்டு, பற்கள் வெண்மையாக ஜொலிப்பதோடு, இப்பழக்கம் உடல் ஆரோக்கியத்தையும் அதிகரிக்கும்.
நார்ச்சத்துள்ள உணவுகள் நாள் முழுவதும் சுறுசுறுப்புடன் சீராக செயல்பட நார்ச்சத்து நிறைந்த டயட்டைப் பின்பற்ற வேண்டியது அவசியம்.
வெது வெதுப்பான ஜூஸ் காலையில் எழுந்தவுடன் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து குடித்தால், உடலில் தேங்கியுள்ள டாக்ஸின்கள் வெளியேற்றப்பட்டு உடல் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.
உடலிலேயே சருமம் தான் மிகப்பெரிய உறுப்பு. எனவே சருமத்தை ஒவ்வொரு நாளும் பராமரிக்க வேண்டும். அதுவும் வெளியே செல்லும் முன் வெயிலில் இருந்து பாதுகாப்பு கிடைக்க சன் ஸ்க்ரீன் தடவுவது, சருமம் வறட்சியடையாமல் இருக்க மாய்ஸ்சுரைசர் தடவுவது, கடலை மாவு அல்லது பாசிப்பருப்பு மாவு ஆகியவற்றைப் பயன்படுத்தி குளிப்பது என்று செய்து வந்தால், சரும பிரச்சினைகள் வருவதைத் தவிர்க்கலாம்.
Related Posts :
- Back to Home »
- அழகு , ஆரோக்கிய வாழ்வு »
- ஆண்களின் உடல் ஆரோக்கியத்திற்கு..........

