Posted by : Author
Thursday, 5 November 2015
அவுஸ்திரேலிய மருத்துவ ஆய்வு
தாடி, மீசை வளர்ப்பது ஆண்களின் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது என அவுஸ்திரேலிய ஆய்வொன்று கூறுகிறது.
தாடி, மீசை வளர்ப்பது சூரியனிலிருந்து வெளிப்படும் தீங்கு விளைவிக்கக் கூடிய புற ஊதா கதிர்களிலிருந்து ஒருவரது முகத்தைப் பாதுகாத்து அவர் ஆரோக்கியத்துடன் திகழ வழிவகை செய்வதாக தென் குயீன்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்ட கதிர்வீச்சு பாதுகாப்பு தொடர்பான ரேடியேஷன் புரொடக்ஸன் டொஸிமெட்றி ஆய்வேடு கூறுகிறது.
கதிர்வீச்சு தொடர்பான ஆய்வை மேற்கொண்ட ஆய்வாளர்கள், முகத்தில் தாடி, மீசை இல்லாத பகுதிகளை விட தாடி மீசை உள்ள பகுதிகள் புற ஊதா கதிர்வீச்சால் குறைந்தளவில் பாதிக்கப்பட்டுள்ளமையை கண்டறிந்துள்ளனர்.
மேற்படி ஆய்வானது 1.5 அங்குலத்திலிருந்து 3.5 அங்குல நீளமுடைய தாடி, மீசையைக் கொண்டவர்கள் மத்தியில் நடத்தப்பட்டது.
தாடி, மீசையின் நீளத்தைப் பொறுத்து அவை சூரிய கதிர்வீச்சிலிருந்து முகத்தை 90 சதவீதத்திலிருந்து 95 சதவீதம் பாதுகாப்பதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின் றனர்.
இதனால் கதிர்வீச்சால் ஏற்படக்கூடிய சரும பாதிப்பு தடுக்கப்பட்டு முகம் இள மைத் தோற்றத்துடன் சுருக்கங்களின்றி பேணப்படுவதாக அவர்கள் கூறுகின்றனர்.
ஒருவரது முகத்திலும் ஏனைய சூரிய ஒளி படும் உடல் பாகங்களிலும் காணப்படும் முடிகள் சூரிய கதிர்வீச்சிலிருந்து பாதுகாப்பைத் தருவதாக லண்டனை அடிப்படையாகக் கொண்டு செயற்படும் மருத்துவ நிபுணரான நிக் லொவி தெரிவித்தார்.
நேர்கோட்டில் பயணிக்கும் கதிர்வீச்சை காவும் ஒளி அலைகள், அடர்ந்த முடிகள் மீது தொடுகையுறுகையில் விலகல் அடைவதால் அவை தோலைப் பாதிப்பது தடுக்கப்படுவதாக இந்த ஆய்வில் பங்கேற்ற லெயன் சாலிஸ் தெரிவித்தார்.
இவ்வாறு தாடி, மீசை வளர்ப்பது சூரிய கதிர்வீச்சால் தோல் புற்றுநோய் பாதிப்பு ஏற்படுவதையும் தடுப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
மேலும் ஒருவர் வளர்த்துள்ள தாடி, மீசை அவருக்கு ஒவ்வாமை ஏற்படுத்தக் கூடிய தூசு துணிக்கைகள் அவரது நாசித் துவாரத்தினூடாக அவரது நுரையிரலை சென்றடைவதைத் தடுத்து, அவருக்கு ஆஸ்துமா நோய் ஏற்படாமல் தடுப்பதாக அந்த ஆய்வில் பங்கேற்ற மருத்துவ நிபுணரான ரொப் ஹிக்ஸ் தெரிவித்தார். அத் துடன் ஒருவரது தாடி, மீசையானது தோலின் ஆரோக் கியத்தைப் பாது காத்து அவர் மிகவும் இளமை யுடன் திகழ வழி வகை செய்வதா கவும் மருத்துவ நிபுணர் நிக் லொவி கூறினார்.
Related Posts :
- Back to Home »
- ஆரோக்கிய வாழ்வு »
- ஆரோக்கியத்தைப் பேண தாடி, மீசை வளருங்கள்....

