Posted by : Author
Friday, 31 July 2015

தானிய வகைகளை உண்பதால் பல்வேறு உடல் ஆரோக்கியம் கிடைப்பதாக பல தகவல்களை அறிந்திருப்பீர்கள்.
இந் நிலையில் நாள்தோறும் அரை கைப்பிடி தானியங்களை உணவாக உட்கொள்வதால் அசாதாரண வயதெல்லைகளில் ஏற்படும் மரணங்களை தடுக்க முடியும் என புதிய ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெதர்லாந்திலுள்ள Maastricht பல்கலைக் கழகத்தினரால் 10 வருட காலமாக மேற்கொள்ளப்பட்ட குறித்த ஆய்வில் இவ்வாறான மரண வாய்ப்புக்கள் 23 சதவீதத்தினால் குறைக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏனைய தானியங்களை விடவும் வேர்க்கடலை அதிக பயனைத் தருவதாகவும் இந்த ஆய்வின் மூலம் அறிந்து கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் இந்த ஆய்விற்காக 55 தொடக்கம் 69 வயது வரையான 120,000 ஆண்கள் மற்றும் பெண்கள் பயன்படுத்தப்பட்டுள்ளனர்.