Posted by : Author
Friday, 31 July 2015

கர்ப்பிணி பெண்கள் மாங்காய் சாப்பிடுவது, சாம்பலை ருசிப்பது போன்றவற்றை செய்து வருகின்றனர். இவர்கள் காரசாரமான உணவுகளை அதிகம் உட்கொள்ளாமல் இருப்பது நல்லது.
கர்ப்பிணி பெண்களுக்கு உமிழ்நீரின் சுரப்பு அதிகமாகையால் வாந்தி உணர்வு காணப்படும். மாங்காய், நெல்லிக்காய் போன்ற புளிப்பு உணவுகளை சாப்பிடுவதால் வாய்க்கு இதமாக இருக்கும். ஆனால் இது போன்ற உணவுகளை அதிகம் சாப்பிடுவதனால் வயிற்றில் அமிலத்தன்மை அதிகரித்து நெஞ்செரிச்சல்இ எதுக்களிப்பு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். மேலும் உப்பும் காரமும் அதிகமுள்ள ஊறுகாயைத் தவிர்ப்பதும் நல்லது.
உப்பு அதிகமுள்ள உணவுப்பொருட்களை கர்ப்பிணிகள் சாப்பிடுவதனால் உயர் இரத்த அழுத்தம் உருவாகும் வாய்ப்பு காணப்படுகின்றது. காரமான உணவுகளை சாப்பிட நேர்ந்தால் தயிர் அல்லது மோர் போன்ற உணவுகளை உட்கொண்டால் வயிற்றில் ஏற்படும் அமிலத்தன்மை ஓரளவு குறையும்.
கர்ப்பிணிகள் ஆசைப்பட்ட உணவுகளை அளவோடு சாப்பிட்டுக் கொண்டால் உடல் ஆரோக்கியமாக இருககும்.
Related Posts :
- Back to Home »
- ஆரோக்கிய வாழ்வு »
- கர்ப்பிணிகள் புளிப்பு அதிகம் சாப்பிடுவதனால் ஏற்படும் பிரச்சினைகள்...

