Posted by : Author
Friday, 31 July 2015

பொதுவான பலவீனம் முதல் மூளையை சுறுசுறுப்பாக்குவது வரை ஒமேகா 3 என்கிற கொழுப்பு அமிலம் உதவுகின்றது.
ஒமேகா 3 என்னும் கொழுப்பு அமிலம் நம் உடலில் உற்பத்தியாகாது. இதனை உணவின் மூலமே நாம் உட்கொள்ள வேண்டும். இதனை அன்றாட உணவில் சேர்க்க வேண்டியது முக்கியம். இந்த கொழுப்பு அமிலம் உடல்நலத்துக்கு இன்றியமையாதது.
ஒமேகா 3 இதய நோய்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியையும் பாதுகாப்பையும் வழங்குகின்றது.
இதய நாளங்களில் உள்ள கெட்ட கொழுப்பினை குறைப்பதில் ஒமேகா 3 முக்கிய பங்கு வகிக்கிறது. இரத்தம் உறைவதை தடுப்பதனால் பக்கவாதம், மாரடைப்பு போன்ற பிரச்னைகள் ஏற்படுவது குறைக்கப்படுகின்றது.
மேலும், ஒமேகா 3 புற்றுநோய் வராமல் தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. யுனுர்னு (யுவவநவெழைn னுநகiஉவை ர்லிநசயஉவiஎவைல னுளைழசனநச) பாதிப்புள்ள குழந்தைகளின் கவனச்சிதறலை குறைத்து, அவர்களை ஒருமுகப்படுத்துவதுடன்அவர்களின் உள் வாங்கும் திறனை அதிகரிக்கிறது. நினைவாற்றல் செல்களை அதிகரித்து மூளையை சுறுசுறுப்பாக்கவும் இது உதவுகிறது.
இது பார்வைக்கும் மூளையின் ஆரோக்கியத்துக்கும் அவசியம் என இப்போது வலியுறுத்தப்படுகிறது.
கர்ப்பிணிகள் தேவையான அளவு ஒமேகா 3 உட்கொள்வதனால் பிறக்கும் குழந்தைகளின் கவனக்குறைபாட்டுப் பிரச்னையை தவிர்க்கலாம்.
மீன்களில் கெளுத்தி, கானாங்கெளுத்தி, மத்தி, நெத்திலி, சால்மன் போன்றவற்றில் ஒமேகா 3 இருக்கிறது. வாரம் 3 முதல் 4 முறை 75 கிராம் அளவு மீன் சாப்பிடும் போது தேவையான அளவு ஒமேகா 3 இனை பெறலாம்.
சைவ பிரியர்கள் சோயா பீன் எண்ணெய், கேனோலா எண்ணெய், வால்நட், ஃபிளாக்ஸ் விதைகள், சோயாபீன்ஸ், ராஜ்மா, சோயா டோஃபு போன்றவற்றை தினம் 4 முதல் 5 டீஸ்பூன் அளவு சாப்பிடுவது நல்லது.
மருந்துகள் மூலமாகவும் ஒமேகா 3 இனை பெற முடியும். மீனில் இருந்து தயாரிக்கப்படும் மீன் எண்ணெய் மாத்திரைகளில் ஒமேகா 3 இருக்கிறது. இதனை தேவைப்பட்டவர்கள் உட்கொள்ளலாம்.