Posted by : Author Friday, 31 July 2015


நம் எல்லோருக்கும் இரண்டு சிறுநீரகங்கள் இருக்கின்றன என்று தெரியும். இரத்தத்தில் சேரும் கழிவுப்பொருள்களை வடிகட்டி சிறுநீராக வெளியேற்றும் மிக முக்கியமான பணியை சிறுநீரகங்கள் செய்கின்றன.

இந்நிலையில் அக்குபஞ்சர் மருத்துவம், சிறுநீரகத்தினை சிறப்பாகப் பேணி பாதுகாத்து வருவதே ஆரோக்கியத்தின் அடிப்படை என வலியுறுத்துகிறது. ஏனெனில் உடலில் ஓடும் பன்னிரண்டு ஓடு பாதைகளில் சிறுநீரக ஓடு பாதையில் தான் இரண்டு உயிர் சக்திகள் உள்ளனவாம்.

நாம் பிறக்கும் போது தாய் தந்தையிடம் இருந்து பெற்றுக்கொள்ளும் சக்தி ஒன்று. மற்றொன்று, வாழும் காலத்தில் சாப்பிடும் உணவு மற்றும் குடிநீர் ஆகியவற்றிலிருந்து உடல் உற்பத்தி செய்து கொள்ளும் சக்தி.

இவை தான் நம்முடைய வளர்ச்சி உடலில் ஏற்படும் மாற்றங்கள், அதாவது இளமை, முதுமை ஆகிய எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது.

குழந்தை பிறந்து ஆறாவது மாதம் முதல் பத்து அல்லது பன்னிரண்டு வயதிற்குள் அனைத்துப் பற்களும் முளைத்துவிடும்.இடையிடையே விழுந்து முளைப்பது முதல், இருபத்தைந்து வயதிற்குள் ஞானப் பற்க ளோடு பற்கள் முளைப்பது நின்றுவிடும்.

பிறகு 50 வயதிற்கு மேல் பற்கள் விழத்தொடங்கும். இவையனைத்திற்கும் சிறுநீரக ஓடுபாதை தான் முக்கிய காரண மாகும். அதேபோல் முடி வளர்ச்சி மற்றும் எலும்புகளின் வளர்ச்சிக்கும் ஆதாரமாக இருப்பது இந்த சிறுநீரக ஓடுபாதை தான்.

ஒரு மனிதன் இறந்துவிட்டதை அலோபதி மருத்துவம் இரண்டு வகையாகப் பிரித்து உறுதிப்படுத்துகிறது.

ஒன்று உடலிறப்பு (Physical Death) மற்றொன்று செல்லுலார் இறப்பு (Cellular Death).

இதை இன்னும் தெளிவாக விளக்க வேண்டும் என்றால், ஒரு மனிதனின் கருவிழிகள் ஒளிக்கதிர்களுக்கு ஏற்ப சுருங்கி விரியவில்லை என்றால் அவன் இறந்துவிட்டான் என்று பொருள்.

அதன் பிறகும் சுமார் ஆறு மணித் தியாலங்கள் வரை மூளையின் சில பகுதிகள் வேலை செய்துகொண்டு தானிருக்கும். அதன் பிறகே அப்பகுதியில் உள்ள செல்கள் இறக்கும். ஆனால் ஒரு மனிதன் இறந்து மூன்று நாள்கள் வரை அவனது முடிகளும், நகங்களும் வளர்ந்துகொண்டுதானிருக்கும்.

இதனை ஒப்புக்கொள்ளும் அலோபதி மருத்துவம் அதற்கான காரணத்தை கண்ட றியவில்லை. ஆனால் அக்குபஞ்சர் மருத்து வம் அதற்கான காரணத்தை கண்டறிந்துள் ளது.

கரு உருவாகி, அது குழந்தையாய் வெளியே வருவதற்கு முன்பே Parental Energy என்று சொல்லப்படும் சக்தி, அதாவது எஸ்ஸென்ஸ், பெற்றோரிடமிருந்து குழந் தையின் சிறுநீரகத்தில் போய் தங்கிவிடுகிறது.

இந்த எஸ்ஸென்ஸ் தான் மனிதன் இறந்த பிறகும் மூன்று நாள் வரை உடலை விட்டு வெளியே செல்லாமல் தலைமுடி, நகங்கள், எலும்பு ஆகியவை வளர்வதற்கு காரணமாகின்றன.

இதனை அக்குபஞ்சர் மருத்துவம் கண்டறிந்து சொல்லியிருக்கிறது.

சிறுநீரகப் பிரச்சினை காரணமாக டயாலி ஸிஸ் சிகிச்சை செய்து கொண்டிருப்பவர்கள் இந்த அக்குபஞ்சர் முறையிலான சிகிச்சையை மேற்கொண்டால் நல்ல பலனைக் காணலாம். அதுமட்டுமல்ல தோல்களில் ஏற்படும் வியாதிகளுக்கும் சிறுநீரக ஓடுபாதையில் ஏற்பட்டிருக்கும் அடைப்பு தான் காரணம்.

எனவே சிறுநீரக ஓடுபாதைகளை ஆரோக்கியமாகப் பராமரித்தாலே உங்களுக்கு எந்த விதமான சிக்கலும் வராது என்பதை உறுதியாகச் சொல்ல முடியும் என்கிறது அக்குபஞ்சர் மருத்துவம்.

- டொக்டர். எம்.முத்துக்குமார்

Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

Welcome to My Blog

- Copyright © மருத்துவம் -New Mannar- Powered by New Mannar - Designed by New Mannar -