Posted by : Author Friday, 31 July 2015


தினம் ஒரு முட்டை சாப்­பிட்டால் நோய்கள் நெருங்­காது என்று ஆய்­வுகள் தெரி­விக்­கின்­றன. ஒரு முட்­டையின் வெள்ளைக் கருவில் 17 கலோ­ரியும், மஞ்சள் கருவில் 59 கலோ­ரியும் உள்­ளன. ஒரு முட்­டையில் 6.3 கிராம் புரோட்டின் உள்­ளது.

இதில் வெள்­ளைக்­க­ருவில் 3.5 கிராம் புரோட்­டீனும், மஞ்சள் கருவில் 2.8 கிராமும் உள்­ளது. முட்­டையின் வெள்­ளைக்­க­ருவில் குளோரின், மெக்­னீ­சியம், பொட்­டா­ஷியம், சோடியம், சல்பர், ஜிங்க் உள்­ளிட்ட 11 மின­ரல்கள் உள்­ளன.

மஞ்சள் கருவில் விற்றமின் டி, பி 12, ஏ, இ, கே, பி 6 போன்ற சத்­துகள் உள்­ளன. முட்­டையில் இயற்­கை­யா­கவே விற்றமின், 'பி12' மற்றும் ரைபோ­பி­ளமின் போன்ற நினை­வாற்­றலை மேம்­ப­டுத்தும் விற்றமின்கள் உள்­ளன. இந்­தச்­சத்­துகள், குறிப்­பாக கர்ப்­பிணிப் பெண்­க­ளுக்கும், பாலூட்டும் தாய்­மார்­க­ளுக்கும் முக்­கியத் தேவை. முட்­டையில் உள்ள குறிப்­பிட்ட சில அன்டி அக்­சிடென்ட், கண் புரை போன்ற பிரச்சி­னைகள் வராமல் தடுக்­கி­றது.

உட­லுக்குத் தேவை­யான நல்ல கொழுப்பு 5 சத­வீதம் உள்­ளது.எலும்பு வளர்ச்­சிக்குத் தேவை­யான விற்றமின் 'டி' முட்­டையில் உள்­ளது. அதேபோல், தோலுக்குத் தேவை­யான விற்றமின் 'ஈ' மற்றும் இரத்த சிவப்­ப­ணுக்கள் உற்­பத்­திக்கு ஆதா­ர­மான இரும்பு சத்து, நோய் எதிர்ப்பு சக்­தியை அதி­க­ரிக்க உதவும் துத்­த­நாகம் போன்­ற­வையும் முட்­டையில் உள்­ளன.

செல் சுவர்­களை உரு­வாக்கும், மூளை வளர்ச்­சிக்குப் பயன்­படும் கோலின் என்ற நுண்­ணூட்டச் சத்தும் முட்­டையில் உள்­ளது. மஞ்சள் கருவில் கொழுப்புச் சத்து மட்டும் 185 மில்லி கிராம் உள்­ளது. இளம் வய­தினர் தினமும், 300 கிராம் கொழுப்பு சாப்­பி­டலாம் என்று பரிந்­து­ரைக்­கப்­ப­டு­கி­றது.

இதய நோய், நீரிழிவு நோய் பிரச்சினை, அதிக அளவு கெட்ட கொழுப்பு உடலில் இருந்தால், முட்­டையின் மஞ்சள் கருவை தவிர்க்க வேண்டும். வய­தா­ன­வர்­க­ளுக்கு ஜீரண சக்தி குறை­வாக இருக்கும் என்­பதால், அவர்­களும் முட்­டையை தவிர்க்கலாம். கொழுப்பை தவிர்க்க விரும்பு பவர்கள் காலை உணவில் இரு முட்டைகளின் வெள்ளைக் கருவை மட்டும் சாப்பிடலாம்.

Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

Welcome to My Blog

- Copyright © மருத்துவம் -New Mannar- Powered by New Mannar - Designed by New Mannar -