Posted by : Author
Saturday, 8 August 2015
நிறைய பேருக்கு எப்போதும் சூயிங் கம்மை மெல்லும் பழக்கம் இருக்கும். அவ்வாறு சூயிங்கம் மெல்லுவதனால் உடல் ஆரோக்கியம் பாதிப்படைகின்றது.
சூயிங் கம் மெல்லுவதால், ஆரோக்கியமான உணவுகளான பழங்கள் மற்றும் காய்கறிகள் சாப்பிடும் அளவு குறையும் என ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.
வாயில் உள்ள தசைகளுக்கு அளவுக்கு அதிகமாக வேலை கொடுப்பதனால் மூட்டுகளில் பிரச்சனைகள் ஏற்படும். அதிலும் சூயிங் கம்மை தொடர்ந்து மென்றவாறு இருப்பதனால் தாடையை மண்டையுடன் இணைக்கும் மூட்டுகள் மற்றும் தசைகளில் கடுமையான வலியையும் ஏற்படும்.
இதில் அடங்கியுள்ள பதப்படுத்தும் பொருள், செயற்கை சுவையூட்டிகள் போன்றனவேயே இதற்கு காரணம்.
சூயிங் கம் மெல்லுவது பற்கள் மற்றும் ஈறுகளுக்கு நல்லது என்றாலும், அளவுக்கு அதிகமாகும் போது, பற்கள் மற்றும் ஈறுகளுக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தும். பற்களில் உள்ள மெர்குரி வெளிப்பட்டு, உடலினுள் சென்று, மோசமான விஷமாக மாறி, நாளடைவில் அது பெரும் ஆபத்தை ஏற்படுத்தும்.