Posted by : Author Thursday, 25 June 2015


பொதுவாக இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களை நீங்கள் அதிகமாக பார்க்கலாம்.
அதாவது கால் தொடைக்கு கீழ்ப் பகுதியிலோ, முட்டிக்காலுக்கு பின்புறத்திலோ, நரம்புகள் ஒன்றுடன் ஒன்று பிணைந்திருப்பதை போன்றும் தனியாக முறுக்கி கொண்டதைப் போல இருப்பதைப் பார்த்திருப்பீர்கள்.

முட்டிக்கால்களுக்கு கீழேயும் இத்தகைய நரம்பு முடிச்சுகள் சிலருக்கு இருக்கும். உடலின் மற்ற பாகங்களிலும் கூட இத்தகைய முடிச்சுகள் ஏற்படும்.

இதனால் அவ்வப்போது கால் பகுதியில் வலியும், வேதனையும், குடைச்சல் போன்ற உணர்வும் ஏற்படும்.

மேலும் கால் பகுதியில் இரத்த ஓட்டம் கடுமையாக பாதிக்கும்.இதனால் கால்கள் செயல் இழப்பது, வீங்குவது போன்ற பல தொல்லைகள் ஏற்படக்கூடும்.

ஏற்படுவதற்கான காரணங்கள்

நமது கை, கால்கள் உட்பட உடலின் அனைத்து பாகங்களில் இருந்தும் அசுத்த இரத்தத்தை இதயத்துக்கு எடுத்துச் செல்லும் இரத்தக் குழாய் களுக்கு வெயின்(Vein) என்று பெயர்.

வெரிகோஸ்(Varicose) என்றால் இரத்த நாளங்கள் புடைத்துப்போதல் அல்லது வீங்குதல் என்று பொருள். நமது இதயத்திற்கு அசுத்த இரத்தத்தை எடுத்துச் செல்லும் இந்த நாளங்கள் சுருண்டுகொள்ளுதல், வீங்குதல் போன்றவற்றையே வெரிகோஸ் வெயின்(Varicosis vein) என்று அழைக்கிறோம்.

ஒரு கூட்டுக்குள் இருப்பதைப் போலதான் மனிதனின் பெருங்குடல் அமைந்துள்ளது.

எனவே சில வேளைகளில் மலச்சிக்கல் ஏற்படும் போது, இரத்தநாளங்கள் அனைத்தும் அழுத்தப்படு கின்றன. இதனால் நாளங்கள் புடைத்தல் அல்லது வீங்குதல் போன்ற இயல்புக்கு மாறான நிலைக்கு தள்ளப்படுகின்றன.

எனவே, மலச்சிக்கல் தான் இந்த நோய்க்கான மூல காரணமாக கருதப்படுகிறது.

மேலும் ஒரே இடத்தில் நீண்ட நேரம் அசைவற்று நின்றபடியே வேலை செய்வது, ஒரே இடத்தில் கால்களை தொங்க விட்ட படியே அசைவற்று உட்கார்ந்திருப்பது போன்றவற்றாலும் இரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு இந்நோய் வருவதற்கு வாய்ப்புகள் உண்டு.

சிலருக்கு இரத்த நாளங்களில் உள்ள வால்வுகள் பலவீனமாக இருப்பதாலும் இந்த நோய் ஏற்படுகின்றன.

வெரிகோஸ் வெயின் நோய் வருவதற்கான வாய்ப்புகள்

மலச்சிக்கல், அதிக எடை, கருவுற்றிருக்கும் காலத்தில் போதிய பராமரிப்பின்மை, அசை வற்றிருத்தல் போன்ற காரணங்களால் பெண்களுக்கு வர அதிக வாய்ப்புள்ளது.

பரம்பரையில் யாருக்கேனும் இருந்தாலும் இந்நோய் வருக்கூடும். வயது முதிர்ந்தவர்களுக்கு இரத்த ஓட்ட பாதிப்பினால் வர வாய்ப்புண்டு.

அதிக எடை உள்ளவர்கள், மற்றும் கொழுப்பு உள்ளவர்கள் இந்த நோயால் எளிதில் பாதிக்கப்படுகின்றனர்.

மேலும் பிள்ளைப்பேறு, மெனோபாஸ், குடும்ப கட்டுப்பாட்டுக்கான அறுவைசிகிச்சை போன்ற காரணங்களால், ஆண்களைவிட பெண்களுக்கே இந்நோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம்.

அதிக நேரம் ஒரே இடத்தில் நின்று கொண்டே வேலை செய்பவர்கள் , அசைவற்று ஒரே இடத்தில்அமர்ந்திருப்பது போன்ற வாழ்க்கை முறை உள்ளவர்களுக்கு வெரிகோஸ் வெயின் நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

தடுக்கும் முறைகள்

இந்த நோய் வந்துவிட்டால் அதனை அவ்வளவு எளிதில் அகற்ற முடியாது. ஒருவேளை மேலும் அதிகரிக் காமல் பார்த்துக்கொள்ளலாம்.

எனவே முடிந்தவரை இந்த நோயை வராமல் தடுப்பதே நலம்.

எனவே எடை அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அதிக நேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருப் பதையோ, நின்றுகொண்டு இருப்பதையோ தவிர்த்து எப்போதும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டே இருப்பது நல்லது. தொடைகளை இறுக்கும் ஆடைகளை அணியக் கூடாது.

எடை அதிகம் உள்ள பெண்கள் குதிகால் உயர்ந்த செருப்பு அணிவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

சிகிச்சைகள்

அறுவை சிகிச்சைகளாலோ, மற்ற விதிமுறை கள் மூலம் இந்த வீக்கங்களை அகற்றுவதாலோ முழுமையாக பயன் கிடைக்காது.

ஏனென்றால், மற்றொரு இரத்த நாளத்தின் மூலமாக இந்நோய் ஏற்பட வாய்ப்புண்டு.எனவே வெரிகோஸ் வெயின் நோய் வந்தபின்னர் அதனை அகற்றுவது கடினம் என்பதையும், வரும்முன் காப்பதற்கு முயல வேண்டும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஆயுர்வேதத்தில் இந்நோயின் தன்மைக்கு ஏற்ப உள் மருந்துகள் உட்கொள்வதாலும், தைலங்கள் கொண்டு நீவி விடுவதாலும் மற்றும் முறையான பஞ்சகர்மா சிகிச்சைகள் ஆகியவை மிகுந்த பலனை அளிக்கின்றன.

சிலருக்கு மருந்து மூலம் குணப்படுத்தும் நிலையில் இந்த நோயின் தாக்கம் இருக்கும். அத்தகையோருக்கு மருந்துகளுடன் பிரத்யேக காலுறை அணிந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படும்.

ஸ்கெலரோதெரபி(Sclerotherapy ): இந்த சிகிச்சையின் மூலமும் இந்த நோயை குணப்படுத்தலாம். ஆனால் இந்த சிகிச்சையை நீண்ட காலம் மேற்கொள்ள வேண்டும். இத்தகைய சிகிச்சை முறைகளை முழு அளவில் மேற் கொள்ளாவிடில் முழு அளவில் பயன் கிடைக்காது.

மேலும் இத்தகைய சிகிச்சை முறைகளில் நரம்புகளில் இரத்தக்கட்டிகள் தோன்றும். சில சமயங்களில் இந்த இரத்தக் கட்டிகள் இருத யத்தை நோக்கி நகர்வதற்கான வாய்ப்புகளும் உண்டு. அல்லது நுரையீரல் போன்ற பகுதிகளில் சிக்கலை ஏற்படுத்தலாம்.

எனவே இந்த மருத்துவமுறையை மேற்கொள்வதில் கவனம் தேவை.


Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

Welcome to My Blog

- Copyright © மருத்துவம் -New Mannar- Powered by New Mannar - Designed by New Mannar -