Posted by : Author
Thursday, 25 June 2015
சைவ உணவுகளை விட அசைவ உணவுகளை விரும்பி சாப்பிடுபவர்களே ஏராளம்.
வாரத்தில் இருமுறை மாமிசம் சாப்பிட்டால் பரவாயில்லை, வாரத்தில் அனைத்து நாட்களிலும் சாப்பிடுபவர்களை கட்டுக்குள் கொண்டுவருவது என்பது கொஞ்சம் கடினமான விடயம்.
ஆனால், நாம் எடுத்துக்கொள்ளும் உணவுகளை வைத்து நமது ஆரோக்கியம் மேம்படும் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.
ஏனெனில், ஆரோக்கிய குறைபாட்டால் மருத்துவர்களை அணுகும்போது அவர்கள் தவிர்க்க அறிவுறுத்தும் முதல் உணவுகளில் இடம்பெறுவது சிக்கன், மட்டன், மாட்டிறைச்சிகள் தான்.
அவ்வாறு இறைச்சியை சாப்பிடுவதை நீங்கள் நிறுத்துவதன் மூலம் உங்கள் உடலில் புதுவித மாற்றங்களை காணலாம்.
1.இறைச்சி சாப்பிடுவதை நிறுத்தும்போது முதலில் ஏற்படும் மாற்றம் உங்கள் எடை குறைவதுதான். குறைந்தது 3 அல்லது 4 கிலோ வரை எடை குறைய வாய்ப்புள்ளது.
2. சைவம் மற்றும் அசைவ உணவுகளை சாப்பிடுபவர்கள் மத்தியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், சைவம் சாப்பிடுபவர்களுக்கு 24% இதய நோய்களின் பாதிப்புகள் குறைவாக உள்ளது என தெரியவந்துள்ளது.
3. தசைகளின் வலிமைக்கு புரதச்சத்து மிகவும் அவசியம், எனவே இறைச்சி சாப்பிடுவதை நிறுத்தும்போது புரதச்சத்து குறைய வாய்ப்புள்ளது, ஆகவே புரதச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
4. இறைச்சி சாப்பிட்டால் உடல் சூடு அதிகமாக இருக்கும், எனவே நீங்கள் இந்த உணவை தவிர்ப்பதன் மூலம் உங்கள் உடல் சூடு குறையும்.
5. செரிமானப்பிரச்சனைகள் சரியாகும்.
6.இறைச்சியை கைவிட்டால் அதற்கேற்றவாறு சத்துள்ள காய்கறிகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.