Posted by : Author Thursday, 25 June 2015


நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு குறித்த கால இடைவெளியில் இன்சுலின் ஊசி போடப்படுவது அவசியமாகும். எனினும் அவசர தேவைகள் மற்றும் ஊசிகள் கிடைக்காதவிடத்து உடனடியாகப் பயன்படுத்திக்கொள்ளக்கூடிய வகையில் Smart Patch எனும் புதிய இன்சுலின் பட்டி ஒன்று அமெரிக்க ஆராச்சியாளர்களால் உருவாக்கப்பட்டுள்ளது. 4 சென்ரி மீற்றர்கள் நீளமான இந்த பட்டியில் மிகவும் நுண்ணிய ஊசிகள் காணப்படுவதுடன் இவற்றினூடாகவே இன்சுலின் செலுத்தப்படுகின்றது. மேலும் இவற்றில் குருதியில் உள்ள குளுக்கோசின் மட்டத்தை அறிந்துகொள்வதற்கு விசேட சென்சாரும் பொருத்தப்பட்டுள்ளது. இச் சென்சார் குருதியிலுள்ள குளுக்கோசின் மட்டம் மிகவும் உயர்வாக காணப்படுகின்றது என தெரிவித்தால் இன்சுலின் ஆனது தானாகவே வெளியேறு குருதியில் கலக்கும் வகையில் Smart Patch வடிவமைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

Welcome to My Blog

- Copyright © மருத்துவம் -New Mannar- Powered by New Mannar - Designed by New Mannar -